Thalapathy 69 Update : தளபதி 69-ஐ கன்ஃபார்ம் செய்த H வினோத்... விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி!

Director H Vinoth Collaboration With Vijay in Thalapathy 69 Film : விஜய்யின் தளபதி 69 படத்தை H வினோத் இயக்கவுள்ளதை அவரே உறுதி செய்துள்ளார். அதோடு இப்படத்தின் கதை குறித்தும் H வினோத் வெளிப்படையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 16, 2024 - 16:24
Aug 16, 2024 - 17:53
 0
Thalapathy 69 Update : தளபதி 69-ஐ கன்ஃபார்ம் செய்த H வினோத்... விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி!
விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்கும் H வினோத்

Director H Vinoth Collaboration With Vijay in Thalapathy 69 Film : விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனையொட்டி கோட் ட்ரெய்லர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக, அடுத்து இன்னொரு சர்ப்ரைஸ் அப்டேட்டும் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது. அது விஜய்யின் தளபதி 69(Thalapathy 69 Update) படம் பற்றிய அப்டேட் என்பது குறிப்பிடத்தக்கது.  

விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க முடிவு செய்துவிட்டார். இதனால் கோட் வெளியானதும் கடைசியாக ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். விஜய்யின் 69வது(Thalapathy 69) படமான அதனை யார் இயக்கவுள்ளார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இந்த ரேஸில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், H வினோத்(H Vinoth), நெல்சன், வெற்றிமாறன் என மேலும் சில இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால், H வினோத் தான் இந்த ரேஸில் முன்னணியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விஜய் - H வினோத் இணையும் தளபதி 69 பொலிட்டிக்கல் ஜானர் மூவியாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் தளபதி 69(Thalapathy 69 Director) படத்தை இயக்கவுள்ளதை H வினோத் கன்ஃபார்ம் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதுகுறித்து பேசியிருந்தார். அதில், விஜய்யின் தளபதி 69 திரைப்படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவில்லை எனவும், அது பக்கா கமர்சியலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். விஜய்க்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்களும் உள்ளனர். அதனால் இந்தப் படத்தில் கமிட்டாகும் போதே, கதை எல்லோருக்கும் புடிக்கும்படியாகவும், அனைத்து அரசியல் கட்சியினரும் பார்க்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டோம். அதனால், தளபதி 69-ல் அரசியல் லைட்டாக தான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அல்லது கட்சியையோ தாக்கும் விதமாக தளபதி 69(Thalapathy 69) இருக்காது என உறுதியாக தெரிவித்துவிட்டார் H வினோத். அதேபோல், அஜித் – விஜய் குறித்தும் இயக்குநர் H வினோத் பேசியது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், விஜய் - H வினோத் இணையும்(Vijay H Vinoth Collaboration) தளபதி 69 படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் கோட் ரிலீஸுக்குப் பின்னர் தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - டிமான்டி காலனி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

மேலும் இப்படத்தின் டைட்டில், விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. தளபதி 69ல் சமந்தா, அனிருத் ஆகியோர் கமிட்டாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ஒரு கதை கூறியுள்ளாராம் H வினோத். அதனால் தளபதி 69 முடிந்ததும் ரஜினியின் படத்தையும் H வினோத் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கமல்ஹாசனின் KH 233-வது படத்தின் இயக்குநராக கமிட்டாகியிருந்தார் H வினோத். ஆனால், அந்தப் படம் கடைசி நேரத்தில் ட்ராப் ஆனது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow