சினிமா

அப்பா தான் இதுக்கு காரணம்..மேடையில் தந்தையை நினைத்து உருகிய SK

தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கிற இந்த வாய்ப்பு இந்த இடத்திற்கு நான் உண்மையாக இருப்பேன். மரியாதை செய்வேன். தமிழ் மக்களுக்கு நான் எப்பொழுதும் உண்மையாக இருப்பேன்.

அப்பா தான் இதுக்கு காரணம்..மேடையில் தந்தையை நினைத்து உருகிய SK
sivakarthikeyan at amaran movie success meet

அமரன் திரைப்படம் பண்ணுவதற்கு என்னுடைய அப்பா தான் முக்கியமான காரணம் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அமரன் திரைப்படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி , இசையமைப்பாளர்  ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,  “Team work is dream workனு சொல்லுவாங்க எல்லோரும் ஒரு 100% கொடுக்கும்பொழுது அது என்ன மேஜிக் நிகழ்த்தும் அப்படி என்பதுதான் இந்த அமரன்.

நான் எப்போதும் சொல்கிறது தான். அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இந்த உலகத்திற்கு ஏராளம் அன்பே சிவம். இது கமல் சார் உடைய டயலாக். இதுதான் இந்த படத்திற்கு நான் ஒப்பந்தம் செய்யும்போது என்னுடைய நினைவில் இருந்தது. அந்த வரி இன்னவோ மாறவில்லை நான் எப்ப எல்லாம் அமரன் யோசித்தால் அந்த வரிகள் மாறாது.

அமரன் இப்படி நடப்பதற்கு கமல் சாருக்கு நன்றி. படம் ரிலீஸ் அன்றைக்கு இந்த இரண்டு ஆண்டுகளில் நான் அப்போ அப்போ சந்தித்து வருகிறேன். முதல் சந்திப்பு போது நிறைய தூரம் இருந்தது ஏனென்றால் நாங்கள் அப்பொழுது தான் சந்திக்கிறோம். அடிக்கடி சந்தித்ததில்லை கமல் சாருக்கு என்னை பற்றி கொஞ்சம் தான் தெரியும்.இப்போ அந்த தொலைவு கம்மியாகிவிட்டது. ஊரில் இருந்து வந்தவுடன் கமல் சார் எனக்கு கொடுக்கின்ற அந்த ஹக்கிற்காக நான் காத்திருக்கிறேன். கமல்ஹாசன் என்னிடம் போனில் பேசும்போது நான் ரொம்ப மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோர் கிட்டயும் சொல்லுங்கள் அவர்களுக்கு புரியும்.

எனக்கு அப்பொழுதிலிருந்து அமரன் ஒரு வெற்றி பெற மாதிரி இருக்கும் என்று இந்த ராஜ்குமார் கதை சொன்ன நேரத்தில் இருந்து. அமரன் படம் சிறந்த படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் சொன்ன வார்த்தையிலிருந்து தான் ஆரம்பித்தது.

கமல் பார்க்காத வெற்றியோ, கதாபாத்திரமோ அல்லது புகழோ, விருதுகள் எதுவுமே கிடையாது. ஆனால் அவரது தயாரிப்பில் ஒரு படம். இதைவிட சந்தோஷமாக இருக்கிறேன் என்று  சொல்ல வைக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொன்னார்கள் அங்கு ஆரம்பித்தது. நீங்கள் (கமல்ஹாசன்) ஊரில் இருந்து வந்தவுடன் பார்ப்பதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.தமிழக மக்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி. எங்கள் படம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். அதை நீங்கள் வாரி அணைத்துக் கொண்டீர்கள். நீங்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி உங்கள் நண்பர்களுக்கு ரெக்கமண்ட் செய்தீர்கள். அனைத்து வயதினரும் இந்த படத்தை கொண்டாடி தள்ளினீர்கள். நான் இன்னமும் சின்சியராக இருப்பேன். தமிழக மக்களுக்கு எல்லோருக்கும் நன்றி.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி பல்வேறு மாநில மக்கள் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.இந்த படத்தின் வசூல் பற்றி நிறைய நம்பர் சொல்கிறார்கள். 150 கோடியை தாண்டி விட்டது. இன்னும் நிறைய வசூல் செய்யும் என்று வசூல் முக்கியம். ஏனென்றால் தயாரிப்பாளர் நிறைய செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்.இதைத் தாண்டி எனக்கு நிறைய பட்ஜெட் கிடைக்கும். இன்னும் நிறைய பெரிய படங்களை மக்களுக்கு கொடுக்கலாம். எவ்வளவு நாடுகளில் நம்முடைய படத்தை பார்க்க வைக்க முடியுமா அப்படியான படங்களை கொடுக்கணும் என்று அதற்காகத்தான் இந்த வசூலை நான் பார்க்கிறேன். இந்த வசூலை ஒருநாளும் நான் அந்த படத்தை தாண்டி விட்டேன். இந்த படத்தை தாண்டி விட்டேன் என்று பார்க்க மாட்டேன்.

இன்னும் நிறைய பட்ஜெட் வேண்டும். இன்னும் பெரிய கதைகள் சொல்ல வேண்டுமென்று நான் நினைக்கிறேன். முன்னாடி நான் பண்ண அத்தனை எண்டர்டெயின்மென்ட் கமர்சியல் ஃபிலிம்கலும் அந்த அணிகளுக்கும் நான் நன்றி சொல்கிறேன். அவர்கள் கொடுத்தது தான் இந்த மார்க்கெட். அதனால்தான் அமரன் மாதிரி ஒரு சிறப்பான படத்தை கொடுக்க முடிந்தது.இது மாதிரி நிறைய படங்கள் வரும். முயற்சி செய்து கொண்டிருப்பேன். இதை விட பெரிய படம். அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கான நம்பிக்கை என் கண் முன்னே தெரிகிறது. தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கிற இந்த வாய்ப்பு இந்த இடத்திற்கு நான் உண்மையாக இருப்பேன். மரியாதை செய்வேன். தமிழ் மக்களுக்கு நான் எப்பொழுதும் உண்மையாக இருப்பேன் என உருக்கமாக பேசினார்.