GOAT Box Office Collection : பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்கும் கோட்... விஜய்யை கைவிட்ட ரசிகர்கள்..?

Actor Vijay Movie The GOAT Box Office Collection Report in Tamil : விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 9, 2024 - 08:19
Sep 9, 2024 - 14:35
 0
GOAT Box Office Collection : பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்கும் கோட்... விஜய்யை கைவிட்ட ரசிகர்கள்..?
கோட் படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Actor Vijay Movie The GOAT Box Office Collection Report in Tamil : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம், கடந்த வாரம் 5ம் தேதி வெளியானது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீஸான கோட் படத்துக்கு, முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் ரிலீஸானது கோட். அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 700க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் கோட் படத்தை ரிலீஸ் செய்தனர். கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையும் கோட்டுக்கு கிடைத்தது. இந்நிலையில், முதல் வாரத்தின் முடிவில் கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்(Goat Movie Box Office Collection) சரிவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.   

ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது கோட். துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் கோட் படப்பிடிப்பை நடத்தினார் வெங்கட் பிரபு. அதேபோல், கிராஃபிக்ஸ் பணிகளுக்காகவும் பல கோடிகளை செலவு செய்தது தயாரிப்பு நிறுவனம். இன்னொரு பக்கம் விஜய் மட்டுமின்றி மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, சினேகா, லைலா, அஜ்மல் என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்திருந்தது. அதனால் இவர்களுக்கான சம்பள செலவும் நூறு கோடிகளை கடந்துள்ளது. இதன் காரணமாக கோட் படத்தை பயங்கரமாக ப்ரோமோஷன் செய்த படக்குழு, முதல் வாரத்திலேயே போட்ட முதலை கையில் எடுத்துவிட வேண்டும் என இறங்கி வேலை செய்தது.  

இதன் பலனாக முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்தது கோட். விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் 142 கோடி கலெக்ஷன் செய்திருந்தது. இந்த சாதனையை கோட் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 126 கோடி ரூபாய் வசூலித்தது கோட். அதேபோல், கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக(Goat Box Office Collection) படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன்பின்னர் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளில் கோட் வசூல் 200 கோடியை கடந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும் படிக்க - பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளிலும் கோட் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. அதன்படி கோட் 3வது நாள் கலெக்ஷன்(Goat Box Office Collection) 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் வாரத்தின் கடைசி நாளான நேற்று, கோட் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 60 முதல் 70 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கோட் படத்தின் முதல் நான்கு நாட்கள் வசூல், 350 முதல் 370 கோடி வரை இருக்கலாம் என தெரிகிறது. இது கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அபிஸியல் அப்டேட்டின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் ஆகும்.

ஆனால், கோட் முதல் நாள் வசூல்(Goat Box Office Collection)104 கோடி எனவும், 2வது நாளில் 55 கோடியும், மூன்றாவது நாளில் 65 கோடியும், நான்காவது நாளான நேற்று 60 கோடி என்றும் சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் அப்டேட் கொடுத்துள்ளனர். அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் Sacnilk தளம், கோட் திரைப்படம் இதுவரை மொத்தமே 137 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழில் 121 கோடியும், தெலுங்கில் 8 கோடியும், இந்தியில் 3 கோடியும் கலெக்ஷன் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கோட் படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்தால் மட்டுமே தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow