Actor Vijay Movie The GOAT Box Office Collection Day 1 : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இதனால் முதல் நாளில் கோட் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கோட் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, கோட் படத்துக்கு முதல் நாளில்(Goat Box Office Day 1) மொத்தம் 12 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் கோட் படத்தின் வசூல் தாறுமாறாக சம்பவம் செய்யும் என எதிர்பார்ப்பு இருந்தது. கோட் படத்துக்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ, முதல் நாளில் 142 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதுதான் விஜய்க்கு பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக் செய்த படமாகும். எனவே கோட் திரைப்படம் லியோவின் சாதனையை முறியடிக்கும் என அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், கோட் படத்தின் முதல் நாள் கலெக்ஷன்(The Goat Box Office Collection) குறித்து பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 120 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், அதனைவிட ரொம்பவே குறைவாக வசூலாகியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் கோட் படத்தின் முதல் நாள் வசூல் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் முதல் நாள் அதிகம் வசூலித்தது கோட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் படம் எப்படி இருக்கு?
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2, முதல் நாளில் 26 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்தியன் 2ம் பாகத்தை விட விஜய்யின் கோட் முதல் நாளில் அதிகம் கலெக்ஷன் செய்துள்ளது. அதேபோல், கேரளாவில் 6 முதல் 10 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 5 முதல் 8 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாம். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 5 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 15 கோடியும் வசூலாகியுள்ளதாம். ஆக மொத்தம் கோட் படத்தின் முதல் நாள் வசூல்(The Goat Day 1 Box Office Collection), 60 முதல் 70 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது எதிர்பார்த்ததை விட ரொம்பவே குறைவான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்(Box Office) என சொல்லப்படுகிறது. விஜய்க்கு மட்டுமே மிகப் பெரிய ஓபனிங் கிடைக்கும் நிலையில், மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ள கோட் முதல் நாளில் 100 கோடிக்கும் குறைவாக வசூல் செய்துள்ளது. அதேநேரம் கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்(Goat Box Office Collection) குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.