GOAT Review: விஜய்யின் கோட் படம் எப்படி இருக்கு..? இது வெங்கட் பிரபு சம்பவம்... GOAT முழு விமர்சனம்
விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன்று வெளியான நிலையில், இப்படத்தின் முழுமையான டிவிட்டர் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை: தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே கோட் படம் திரையிடப்பட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே நடித்துள்ள கோட் படத்துக்கு, ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. கோட் படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். அதேபோல், கேப்டன் விஜயகாந்த்தை ஏஐ டெக்னாலஜி மூலம் நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்நிலையில், கோட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, கோட் பிளாக் பஸ்டர் மூவி என சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதி கமெண்ட்ஸ் செய்துள்ளார். முதல் பாதியை தொடர்ந்து இரண்டாவது பாதியும் டீசண்டாக உள்ளது. ஓபனிங் சீன், இடைவேளை காட்சி, மட்ட சாங் விஷுவல், கிளைமேக்ஸ் காட்சி எல்லாமே செம ஹைலைட்ஸ். விஜய்யின் இரண்டு கேரக்டர்களும் நன்றாக உள்ளது. யுவன் பின்னணி இசை எதிர்பார்த்தளவில் படத்துக்கு சப்போர்ட் செய்யவில்லை. கேமியோ ரோல்கள் நன்றாக வந்திருந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக உள்ளது என பாராட்டியுள்ளார். மேலும் கோட் படத்துக்கு 3.75 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் அமுதபாரதி.
அதேபோல், சோஷியல் மீடியா ட்ராக்கர் லக்ஷ்மி காந்த், கோட் படத்தின் கிளைமேக்ஸ் செம பிளாஸ்ட். படத்தின் கடைசி 40 நிமிடங்களில் தரமான சம்பவம் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியானதில் இப்படியொரு தியேட்டர் மெட்டீரியல் படத்தை பார்த்தது இல்லை எனவும், வெங்கட் பிரபு ரியல் வின்னர் என்றும் பாராட்டியுள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக வந்துள்ளது, கிளைமேக்ஸ் ஸ்கெட்ச் சூப்பர். தளபதி விஜய், இளைய தளபதி விஜய் என இரண்டு கேரக்டர்களின் நடிப்பிலும் வித்தியாசம் உள்ளது. இரண்டாம் பாதியில் ட்வீஸ்ட் மேல் ட்வீஸ்ட் வைத்துள்ளனர், பக்கா என்டர்டெயினிங் மூவி கோட் என பாராட்டியுள்ளார். அதேபோல் படத்தில் வரும் கேமியோ ரோல்கள் சர்ப்ரைஸ்ஸாக உள்ளன. கோட் கண்டிப்பாக தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மூவி என குறிப்பிட்டுள்ள அவர், இப்படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.
கோட் படத்துக்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் சோஷியல் மீடியா ட்ராக்கர் ராஜசேகர். கோட் படத்தில் நிறைய ஹை மொமண்ட்ஸ் உள்ளன. முக்கியமாக இந்தப் படத்தின் கடைசி 30 நிமிடங்கள் விஜய் ரசிகர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் ட்ரீட்டாக இருக்கும். விஜய் இரண்டு கெட்டப்புகளிலும் ரொம்பவே வெரைட்டியாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். படத்தின் பெரிய பிளஸ்ஸே விஜய்யின் மேனரிசம் தான் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நீளமான ஆக்ஷன் காட்சிகள், பின்னணி இசை ஆகியவை இந்தப் படத்துக்கு கொஞ்சம் மைனஸ் தான். ஆனாலும் கோட் படத்தை கொண்டாட முடிகிறது. வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும். கடைசியில் வரும் டைட்டில் கார்டு, மேக்கிங் வீடியோவை மிஸ் செய்யாமல் பாருங்கள் என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
விஜய்யின் கோட் – வேட்டு என ரைம்மிங்காக விமர்சனம் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இந்தப் படம் தளபதி விஜய்யின் கெத்தா ஒரு ஆட்டம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் ஸ்பார்க் பாடலை எடிட் செய்துவிடுவது நல்லது, இது தான் கோட் படத்தின் ஸ்பீடு பிரேக்கராக இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கதறி வருகின்றனர். தல தோனி ரெஃபரன்ஸ் கூஸ்பம்ஸ் சம்பவம் எனவும், கோட் கண்டிப்பாக இண்டஸ்ட்ரியல் ஹிட் என்றும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க - கோட் படத்தின் நடிகர்கள், நடிகைகள் வாங்கிய சம்பளம் மொத்த லிஸ்ட்
Let's X OTT GLOBAL டிவிட்டர் தளம் கோட் படத்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நிறைய சர்ப்ரைஸ்கள் உள்ளன. கோட் படம் முழுக்க ரசிகர்களுக்கு செம ட்ரீட் உள்ளது. விஜய்யின் நடிப்பு, மேக்கிங், குவாலிட்டி, வேகமான திரைக்கதை, அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட், அஜித்தின் ரெஃபரன்ஸ், காமெடி ட்ராக் ஆகியவை படத்துக்கு பிளஸ் என குறிப்பிட்டுள்ளது. கோட் படத்தின் மைனஸ் என்றால், ஸ்பார்க் சாங், யுவனின் பின்னணி இசை, கிளைமேக்ஸில் வரும் நீளமான சண்டைக் காட்சி ஆகியவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
What's Your Reaction?






