Ameer: “ஜாபர் சாதிக் மனைவி மூலம் வங்கிக் கணக்கில் பணம்..? அவதூறுகள் வேண்டாம்” அமீர் சொன்ன விளக்கம்!

Director Ameer About Jaffer Sadiq Case : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மனைவி மூலம், தனது வங்கிக் கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை என இயக்குநர் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Jul 25, 2024 - 16:28
Jul 26, 2024 - 10:00
 0
Ameer: “ஜாபர் சாதிக் மனைவி மூலம் வங்கிக் கணக்கில் பணம்..? அவதூறுகள் வேண்டாம்” அமீர் சொன்ன விளக்கம்!
அமீர் - ஜாபர் சாதிக்

Director Ameer About Jaffer Sadiq Case : 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் கைதானார். அரசியல், சினிமா, பிஸினஸ் என பல்வேறு பின்னணிகள் கொண்ட ஜாபர் சாதிக், அமீர் இயக்கிய இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தையும் தயாரித்து வந்தார். இதனால் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன், இயக்குநர் அமீருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் இயக்குநர் அமீரிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அமீர்.

அதில், போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் அமலாக்கத்துறையிடம் இருந்து வந்ததாகக் கூறி நேற்று முன்தினம் (ஜூலை 23) ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிகிறது. அந்த செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள், வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால், மக்களிடையே தங்களது நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர, வேறொன்றும் கிடைக்கப் போவது இல்லை. இந்த வழக்கின் துவக்கத்தில் இருந்தே NCB, அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன். அப்படியிருக்கையில் என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைதள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. 

அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு யூடியூபர், அவரது சேனலில் என்னைப் பற்றி தவறான தகவல்களையே பதிவிட்டு வருகிறார். சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை கொண்ட இதுபோன்ற நபர்கள், “இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து..” எப்படியாவது இந்த வழக்கில் நான் கைதாக வேண்டும் என விரும்புவது ஏன் என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்திய, மாநில அரசுகளோ, தனிநபரோ மானுடம் கொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம், ஒரு சக மனிதனாக, தோழனாக, சுயநல நோக்கின்றி எனது எதிர் கருத்துகளையும், போராட்ட செயல்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதை தவிர தன்னிடம் வேறு எந்த குறைகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க - ஸ்கூல் ஃபீஸ் 2.5 லட்சம்... டென்ஷனான சிவகுமார்!

மேலும், என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சித்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயக மாண்பு –அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல! என்பதையும், எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரத பண பரிவர்த்தனையிலோ தான் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள, பொறுப்புள்ள ஊடகங்கள் தங்களது ஊடகத் தர்மத்தை மறந்து நேர்மைக்கு மாறாக இதுபோன்ற செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிட வேண்டாம் எனவும் இயக்குநர் அமீர் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow