Sivakumar: ”அப்போ ஸ்கூல் ஃபீஸ் 365 ரூபாய் தான்... இப்ப இரண்டரை லட்சம்..” டென்ஷனான சிவகுமார்!

Actor Sivakumar Speech : ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் இணைந்து வழங்கும் 45வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பள்ளி கல்விக் கட்டணம் குறித்து சிவகுமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jul 25, 2024 - 11:41
Jul 26, 2024 - 10:02
 0
Sivakumar: ”அப்போ ஸ்கூல் ஃபீஸ் 365 ரூபாய் தான்... இப்ப இரண்டரை லட்சம்..” டென்ஷனான சிவகுமார்!
Agaram Foundation Students Awards

Actor Sivakumar Speech : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிவகுமார். தற்போது சிவகுமார் நடிப்பில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்டாலும், அவரது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் மாஸ் காட்டி வருகின்றனர். இவருமே கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் கங்குவா படமும், கார்த்தி நடிப்பில் மெய்யழகன், வா வாத்தியாரே ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனிடையே சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.     

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதும், அவர்களுக்கு வழிகாட்டுவதுமே அகரம் பவுண்டேஷனின் முதன்மையான பணியாக உள்ளது. சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோருடன் அவர்களது ரசிகர்கள் பலரும் தன்னார்வலர்களாக இணைந்து மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். அகரம் பவுண்டேஷனுக்கு முன்னதாக சிவகுமார் தனது பெயரில், அதாவது ‘ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளை’ மூலம் மாணவர்களுக்கு உதவி வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீ சிவகுமார், அகரம் இணைந்து வழங்கும் 45வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவருமே சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினர்.

அப்போது பேசிய சிவகுமார், இதுவரை 192 படங்களில் 5 கோடி பிரேமில் நடித்துவிட்டேன். ஆனால் பள்ளி காலத்தில் 5 ரூபாய் கொடுக்க முடியாததால், என்னால் குரூப் போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டது என வருத்தமாக பேசினார். மேலும், நான் 365.50 ரூபாய் கொடுத்து எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) முடித்தேன். ஆனால், இப்போது கார்த்தி மகன் ப்ரிகேஜியில் படிக்க இரண்டரை லட்சம் ஃபீஸ் கேட்கிறார்கள் என ஆதங்கமாக பேசினார் சிவகுமார். கல்வி கற்க இவ்வளவு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிவகுமார் பேசியிருந்தார். இது பலரது கவனைத்தை ஈர்த்திருந்தாலும், நெட்டிசன்களில் சிலர் சிவகுமாரை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க - இந்த வாரம் ஜூலை 26ல் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் அப்டேட்! 

அதாவது, சிவகுமார் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் அவர் நூற்றுக்கணக்கிலும், ஆயிரங்களிலும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது கார்த்தியின் சம்பளம் ஒரு படத்துக்கு 20 என சொல்லப்படுகிறது. ஆண்டுக்கு 2 படங்கள் நடித்தால் 40 கோடி வரை சம்பாதிக்கும் கார்த்தியால், இரண்டரை லட்சம் ஃபீஸ் கட்ட முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் கார்த்தியே இரண்டரை லட்சம் ஃபீஸ் கட்ட கஷ்டப்பட்டால், மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் நிலை என்ன என்பதையும் சிவகுமார் யோசிக்க வேண்டும் என விமர்சித்துள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ஏதாவது விலை கொடுத்தால் தான் பரிசு, பலன், உயர்வு கிடைக்கும். எந்த காலத்திலும் மாணவர்கள் தளர்ந்துவிடக்கூடாது. சென்னை போன்ற சிட்டிக்கு வரும் மாணவர்கள், நகரத்தில் உள்ளவர்களின் உடை, ஆங்கில பேச்சால் மிரண்டு விடாதீர்கள். ஒருகாலத்தில் நீங்கள் அவர்களை மிஞ்சுவீர்கள் என நம்பிக்கை கொடுத்தார். அதேபோல், யாராவது படிப்புக்கு உதவி கேட்டால் மறுக்காமல் செய்ய வேண்டும். அதை பணமாக கொடுக்காமல் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஃபீஸாக கட்டுங்கள் என அட்வைஸ் கொடுத்தார்.

அதேபோல், மாணவர்கள் முன் உரையாற்றிய சூர்யா, நீங்கள் மனதில் நினைப்பது நிச்சயம் நடக்கும். பிரச்சினைகளை பெரிதாக பார்க்காதீர்கள், நம்பிகை வைக்க வேண்டும். பாசிட்டிவாக இருப்பதே பெரிய நம்பிக்கையாகும், கல்வி ஒரு பெரிய ஆயுதம் என்றர். மேலும், அகரம் விதை திட்டம் மூலம் இதுவரை 6 ஆயிரம் மாணவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களது இந்த முயற்சியில் 350 கல்லூரிகளுக்கு மேல் உதவியுள்ளனர். தகுதியான மாணவர்களை  அடையாளம் காண்பித்த கல்விக்கு உதவிய அனைத்து தரப்புக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow