This Week OTT Release: இந்த வாரம் ஜூலை 26ல் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் அப்டேட்!

This Week OTT Release Movie List : இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் முழுமையான பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Jul 25, 2024 - 13:00
Jul 26, 2024 - 10:01
 0
This Week OTT Release: இந்த வாரம் ஜூலை 26ல் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் அப்டேட்!
July 26 OTT Release

This Week OTT Release Movie List : தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. அதேநேரம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் என்னென்ன என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இந்த வாரம் சொல்லிக்கொள்ளும்படியாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ள வெப்பன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸான வெப்பன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தன.

மோகன்ராஜ் இயக்கத்தில் யுகேந்திரன், சித்தார்த் அன்பரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள காழ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படம் தியேட்டரில் எப்போது வெளியானது என்ற சுவடே இல்லாத நிலையில், இதுவும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மேலும், சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை வெளியாகிறது. அதேபோல், தெலுங்கில் ஏவம் (Yevam), கிராண்ட்மா (Grandma), பரதநாட்டியம் (Bharathanatyam) ஆகிய படங்களும் இந்த வாரம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.   

மலையாளத்தில் பிரைவேட் கேர் டேக்கர் திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது. அதேபோல், ஸ்வகார்யம் ஸம்பவ பஹுலம் (Swakaryam Sambhava Bahulam) என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தியில் பையாஜி (BhaiyyaJi), சல்தி ரஹே ஜிந்தகி (Chalti Rahe Zindagi) ஆகிய திரைப்படங்கள் ஜீ5 ஓடிடி தளத்திலும், பிளடி இஷ்க் (Bloody Ishq) டிஸ்னி ப்ளஸ் தளத்திலும் வெளியாகின்றன. ஏக் கோரி பிரேம் கதா (Ek Kori Prem Katha) திரைப்படம் ஜியோ சினிமா தளத்திலும் ரிலீஸாகிறது. Mr. & Mrs. Mahi இந்தி திரைப்படமும் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் வெளியாகிறது. 

ஹாலிவுட் ரசிகர்களுக்கு, ஜெர்மன் வெப் சீரிஸ்ஸான Kleo சீசன் 2, The Decameron, Tokyo Swindlers (Japanese), Ghost Busters Frozen Empire ஆகியவை இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன. கமலின் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்திலோ அல்லது ஆகஸ்ட் 9ம் தேதியோ இந்தியன் 2 ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow