“மியூசிக் என்னோடது... ஆனா ஒரு பஞ்சாயத்து!” அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்... கடுப்பான சந்தோஷ் நாராயணன்!
Music Composer Santhosh Narayanan : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது. விஜய், பிரபுதேவா இணைந்து வெளியிட்ட இப்பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Music Composer Santhosh Narayanan : கோலிவுட்டின் டாப் ஸ்டார் பிரசாந்தின் அந்தகன் திரைப்படம்(Andhagan Movie) ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகிறது. சீயான் விக்ரமின் தங்கலான் படத்துக்குப் போட்டியாக அந்தகன் வெளியாவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு வைரலாகி வருகிறது. இருவரும் உறவினர்கள் என்பதால், பழைய குடும்ப பகையை மனதில் வைத்துதான் தங்கலான் VS அந்தகன் ரிலீஸில் போட்டி எனவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது. தளபதி விஜய்யும், நடனப்புயல் பிரபுதேவாவும் அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டனர்.
அந்தகன் Anthem ப்ரோமோ சாங் என்ற டைட்டிலில் வெளியாகவுள்ள இப்பாடலின் வரிகளை உமா தேவியும், ஏகாதேசியும் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதாகவும் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. ஆனால், அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஷயத்தில் ரொம்பவே கடுப்பான சந்தோஷ் நாராயணன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், அந்தகன் படத்துக்கு இசையமைத்தது நான் தான், ஆனால், இப்பாடலில் இருப்பது எனது இசை இல்லை என பதிவிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளார்.
அதாவது, அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இசை சந்தோஷ் நாராயணன் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மிக்ஸட் & மாஸ்டர்ட் என்ற இடத்தில் (Mixed and Mastered) எஸ் சிவகுமார், AM ஸ்டூடியோஸ் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த இடத்திலும் சந்தோஷ் நாராயணனின் பெயர் தான் வந்திருக்க வேண்டும். ஆனால், அதில் அவரது பெயர் இல்லை என்பதோடு, இப்பாடலும் நான் கம்போஸ் செய்தது கிடையாது எனக் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன். தனது டிவிட்டரில் இந்தப் பாடலுக்கு வரிகள், மிக்ஸிங், மாஸ்டர் உள்ளிட்ட அனைத்தும் நான் செய்தது தான். ஆனால் இதனை பரிசோதிக்க நான் எந்தக் கட்டணமும் வாங்கப் போவதில்லை. ஆல் தி பெஸ்ட்! என பதிவிட்டுள்ளார்.
இதனால் அந்தகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக மட்டும் சந்தோஷ் நாராயணனின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிளில் இசையமைப்பாளர் பெயர் சந்தோஷ் நாராயணன் என இருக்க, அவரோ இது எனது இசை இல்லை என தக் லைஃப் கொடுத்துள்ளார். அதுவும் வடிவேலுவின் மீம் டெம்ப்ளேட்டோடு சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பல தடைகளை கடந்து ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது அந்தகன். இந்த நிலையில் படத்தின் இசை விஷயத்தில் சந்தோஷ் நாராயணன் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க - ஜூலை 26 ஓடிடி ரிலீஸ் அப்டேட்
1990களில் சாக்லெட் ஹீரோவாக கோலிவுட்டை கலக்கிய டாப் ஸ்டார் பிரசாந்த், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஹீரோவாக கம்பேக் கொடுக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் தி கோட் படத்திலும் பிரசாந்த் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அந்தகன், தி கோட் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகவிருப்பதால், டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
What's Your Reaction?