B.Ed Question Paper Leak : 2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பி.எட் வினாத்தாள்.. அதிர்ச்சியில் மாணவர்கள்.. பல்கலை பதிவாளர் அதிரடி நீக்கம்!

B.Ed Question Paper Leak : பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்காவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற இருந்த "படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும்" பாடத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Aug 29, 2024 - 12:52
Aug 29, 2024 - 14:47
 0
B.Ed Question Paper Leak : 2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பி.எட் வினாத்தாள்.. அதிர்ச்சியில் மாணவர்கள்.. பல்கலை பதிவாளர் அதிரடி நீக்கம்!
BEd question paper leak

B.Ed Question Paper Leak : பி.எட் வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய பதிவாளராக 

இரண்டாம் ஆண்டு பிஎட் படிப்புக்கான நான்காவது செமஸ்டர் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களே ஒரு வினாத்தாள் விலை 2000ஆயிரம் ரூபாய் என விலைக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பிஎட் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வினை  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் நடத்துகின்றது தமிழகம் முழுவதும் 642 கல்லூரிகள் உள்ளன இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் இன்று நடைபெறக்கூடிய creating an inclusive school என்கிற பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது.

இது குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளனர் அதில் கடந்த 27 ஆம் தேதி தேர்வு தொடங்கியது முதலே வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே விற்பனை செய்யப்பட்டதாக தெரிய வேண்டும் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களே ஒரு வினாத்தாள் விலை 2000ஆயிரம் ரூபாய் என விலைக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இன்று நடைபெறக்கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக உயர்கல்வித்துறை வெளியானதாக சொல்லப்படும் வினாத்தாள் திரும்ப பெற்றுள்ளதாகவும் இன்றைய தேர்வுக்கு புதிய வினாத்தாள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். புதிய பதிவாளராக ராஜசேகரை நியமித்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் அளவில் தமிழகம் முழுவதும் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டவர்கள் யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் ஊழியர்களே இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த  நிலையில் இது குறித்து உயர்கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது மேலும் தேர்வினை ரத்து செய்துவிட்டு புதிய வினாத்தாள் அடிப்படையில் தேர்வினை நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்து வருகின்றது பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியை துணைவேந்தர் தேடுதல் குழுவில் நியமிக்க வேண்டும் என ஆளுநரின் நிபந்தனையால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு மோதல் இருந்து வருகின்றது இதனால் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி இடங்களை நிரப்ப முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தால் பல்வேறு நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்

 இந்த நிலையில் தற்போது கல்வியில் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள்  வெளியான விவகாரம் நிர்வாக சீர்கேட்டிற்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கின்றது எனவே உடனடியாக காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணி  இடங்களை நிரப்ப தமிழக அரசு ஆளுநருடன் ஒத்த கருத்தை ஏற்படுத்தி நியமிக்க வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow