Jennifer Lopez Divorce : விவாகரத்து கோரிய ஜெனிஃபர் லோபஸ்! பென் அஃப்லெக் - கிக் கென்னடி டேட்டிங்கா?
Jennifer Lopez Divorce Ben Affleck : பென் அஃப்லெக் மற்றும் கிக் கென்னடி இருவரும் டேட்டிங் செய்வதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான் என அஃப்லெக்கின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Jennifer Lopez Divorce Ben Affleck : 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் சென்சேஷனல் குயினாகவும் திகழ்பவர் ஹாலிவுட் பாப் பாடகி மற்றும் நடிகை ஜெனிஃபர் லோபஸ். இன்றளவும் அதே அழகோடும் திறமையோடும் தனது ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார் என்றே கூறலாம். 1986ம் ஆண்டு ‘மை லிட்டில் கேர்ள்’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில், Selena, If You Had My Love, Enough, Anaconda உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியைக் கண்டது. குறிப்பாக Selena திரைப்படம் மூலம் ஒரு பாடகியாக இருந்த அவர், நடிகையாக உருவெடுத்தார் என்றே கூறலாம். முதல்முதலில் பாடகியாக திரையுலகிற்குள் நுழைந்த ஜெனிஃபர் லோபஸ் இதுவரை 66க்கும் அதிகமான ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகரான பென் அஃப்லெக், திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தனது தனித்துவமான மற்றும் அசாத்தியமான நடிப்பிற்காக இதுவரை இரண்டு அகாடமி விருதுகள் மற்றும் மூன்று கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். Gone Girl, Deep Water, Reindeer Games உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக Batman v Superman: Dawn of Justice, Suicide Squad ஆகிய படங்களில் பேட் மேனாகக் கலக்கிய இவர், உலக அளவில் ரசிகர்களை சம்பாதித்தார் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துகளும் இல்லை.
இந்த இரண்டு மிகப்பெரிய பிரபலங்களான ஜெனிஃபர் லோபஸ் - பென் அஃப்லெக் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி லாஸ் வேகாசில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இதனைக் கொண்டாடிய ரசிகர்கள் இந்த ஜோடியை பெனிஃபர் (Bennifer) என செல்லமாக அழைத்தனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 20) இவர்களது இரண்டாவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் விவாகரத்து கோரியுள்ளனர். இந்த செய்தி அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் லவ்விங் ஜோடியாக இருந்த இவர்கள் இப்படி பிரிவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க: “நல்ல கதை… நீங்களே படிங்க..” வாழை பஞ்சாயத்து… எழுத்தாளருக்கு மாரி செல்வராஜ் பதிலடி!
இந்நிலையில் பென் அஃப்லெக் தற்போது நடிகை கிக் கென்னடியை டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து பேசிய பென் அஃப்லெக்கின் பிரதிநிதி, “பென் அஃப்லெக்கும் கிக் கென்னடியும் இதுவரை நேரில் கூட பார்த்துக்கொண்டதில்லை. அப்படி இருக்கும்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். ஜெனிஃபர் லோபஸ் உடனான விவாகரத்து ஏற்படவுள்ளதால் பென் அஃப்லெக் மன உளைச்சலில் இருக்கிறார். தவறான வதந்திகளைப் பரப்பி மேலும் அவரை துன்புறுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






