அரசியல்

CM Stalin in America : அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.... மகிழ்ச்சியாக வரவேற்ற நெப்போலியன்

CM Stalin in America : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Stalin in America : அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.... மகிழ்ச்சியாக வரவேற்ற நெப்போலியன்
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

CM Stalin in America : தமிழ்நாட்டிற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார். இதையடுத்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் அவர் முதல்வர் ஸ்டாலினை விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றுள்ளார்.

தற்போது சான்  பிரான்சிஸ்கோவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 2ம் தேதி வரை அங்கு இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார். அப்போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “மிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது.

மேலும் படிக்க: “நல்ல கதை… நீங்களே படிங்க..” வாழை பஞ்சாயத்து… எழுத்தாளருக்கு மாரி செல்வராஜ் பதிலடி!

இந்தப் பயணங்கள் மூலமாக 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 10,882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்க இருக்கிறேன். எல்லோருடைய வாழ்த்துகளோடும் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமானதாக அமையும்” என தெரிவித்திருந்தார்.