Kanguva: சிங்கிளாக களமிறங்கும் ரஜினியின் வேட்டையன்..? சூர்யாவின் கங்குவா ரிலீஸ் தேதியில் மாற்றம்..?
ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா திரைப்படங்கள் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேட்டையனுக்காக கங்குவா ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெய்பீம் படம் போல வேட்டையனையும் தரமான கன்டென்ட் ஓரியண்ட் மூவியாக இயக்கியுள்ளாராம் தசெ ஞானவேல்.
இந்நிலையில், வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என, படக்குழு சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும் அனிருத் அப்டேட் கொடுத்திருந்தார். அதேவேகத்தில் செப்டம்பர் 20ம் தேதி வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்க, சூர்யா ரசிகர்களோ கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படமும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அக்டோபர் 10 ரிலீஸ் தேதியை கங்குவா தான் முதலில் அறிவித்தது. அதாவது ரஜினியின் வேட்டையன் அதே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்றே, கங்குவா ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்தது படக்குழு.
மேலும் படிக்க - ரஜினியின் காலா படத்தின் தோல்வி திட்டமிடப்பட்ட சதி
மேலும், இதுகுறித்து ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஒருபோதும் வேட்டையன் படத்துக்குப் போட்டியாக கங்குவா வெளியாகாது எனவும், நான் ரஜினியின் தீவிர ரசிகன், அவரது பிறந்தநாளுக்கு கோயில் கோயிலாக போவேன் என்பதாக பேசியிருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி வேட்டையன் ரிலீஸ் தேதி தள்ளிப்போகாமல், அக்டோபர் 10ம் தேதியே வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது.
வேட்டையன் – கங்குவா படங்கள் ஒரே தேதியில் வெளியானால், ஸ்க்ரீன்கள் கிடைப்பது முதல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வரை பல பஞ்சாயத்துகள் அரங்கேறும். இதனால் கங்குவா ரிலீஸ் தேதியை மாற்றிவிடலாம் என தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுகுறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஒருவேளை அப்படி கங்குவா பின்வாங்கினால், அக்.10ம் தேதி ரஜினியின் வேட்டையன் மட்டும் சிங்கிளாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?