Pa Ranjith Open Talk : “ரஜினியின் காலா படத்தின் தோல்வி திட்டமிடப்பட்ட சதி..” கொளுத்திப் போட்ட பா ரஞ்சித்!

Director Pa Ranjith Open Talk About Rajini's Kaala Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தை, சிலர் திட்டமிட்டு தோல்வியடைய செய்ததாக இயக்குநர் பா ரஞ்சித் பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.

Aug 22, 2024 - 17:59
Aug 23, 2024 - 10:16
 0
Pa Ranjith Open Talk : “ரஜினியின் காலா படத்தின் தோல்வி திட்டமிடப்பட்ட சதி..” கொளுத்திப் போட்ட பா ரஞ்சித்!
காலா தோல்வி குறித்து மனம் திறந்த பா ரஞ்சித்

Director Pa Ranjith Open Talk About Rajini's Kaala Movie : பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேநேரம், இப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரது நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசையும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், தங்கலான் படம் பா ரஞ்சித்தின் வழக்கமான பாணியில் இல்லை என அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதேபோல், சிலர் தங்கலான் படத்தை மோசமாகவும் ட்ரோல் செய்திருந்தனர். இருப்பினும் தொடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகும் தங்கலான், இதுவரை 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தின் தோல்விக்குப் பின்னால் சதி இருப்பதாக பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். தங்கலான் ரிலீஸுக்குப் பின்னர் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், காலா படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பா ரஞ்சித், காலாவை திட்டமிட்ட தோல்விப் படமாக சிலர் மாற்றினார்கள். காலா படத்தில் நடந்த ஒரு பயங்கரமான விஷயம் என்றால், ரொம்பவே திட்டமிட்டு தோல்வியடையச் செய்தனர். ஆனால், அதுகுறித்து இதுவரை யாருமே பேசவில்லை எனவும், இப்போது பேசினால் அது பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், காலா ரசிகர்களுக்கு திருப்தியாக இல்லை என்றாலும், அது புறக்கணிக்கப்படக் கூடிய அளவிற்கான ஒரு படம் இல்லை. அந்தப் படத்தில் ரசிகர்கள் என்ஜாய் செய்யக்கூடிய விஷயங்கள் நிறையவே இருந்தன. காலா படத்தில் அழகான காதல் உட்பட கொண்டாடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால் வெறுப்பதற்கு ஒருசில காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு காலா படத்தை நிராகரித்ததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 

மேலும் படிக்க - தனுஷுக்கு செக் மேல் செக் வைத்த சன் பிக்சர்ஸ்

அதனால், இந்தச் சம்பவத்தை ஒரு குறையாக சொல்ல விரும்பவில்லை, இது என் மீதான வன்மம் என்றும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்றார். அதேபோல், காலா உண்மையாகவே அரசியல் ரீதியாக திருப்தியளிக்கக் கூடிய அளவில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இவைகளை எனது அடுத்தப் படங்களில் சரி செய்துகொள்வதாக பா ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் காலா தோல்விக்குப் பின்னால் சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மெட்ராஸ் வெற்றிப் பெற்றப் பின்னர் பா ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் ரஜினி. அப்படி முதன்முறையாக ரஜினி – பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான கபாலி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்தே பா ரஞ்சித் இயக்கிய காலா படத்திலும் ஹீரோவாக நடித்தார் ரஜினிகாந்த். மும்பையின் தாராவி பகுதியை பின்னணியாக வைத்து நில அரசியல் பேசும் படமாக வெளியானது காலா. ரஜினியுடன் நானே படேகர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். காலா படத்தை தனுஷ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow