Raayan: ராயன் மெஹா ஹிட்... தனுஷுக்கு செக் மேல் செக் வைத்த சன் பிக்சர்ஸ்... இது ஜெயிலர் சம்பவமாச்சே!

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனுஷுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சன் பிக்சர்ஸின் கலாநிதிமாறன்.

Aug 22, 2024 - 22:42
Aug 23, 2024 - 12:37
 0
Raayan: ராயன் மெஹா ஹிட்... தனுஷுக்கு செக் மேல் செக் வைத்த சன் பிக்சர்ஸ்... இது ஜெயிலர் சம்பவமாச்சே!
தனுஷுக்கு செக் கொடுத்த கலாநிதிமாறன்

சென்னை: தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், இயக்குநராகவும் மாஸ் காட்டி வருகிறார். பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அடுத்து ராயனை இயக்கினார். தனுஷின் 50வது படமான ராயன், கடந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சம்பவம் செய்த ராயன், இதுவரை 110 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதுமட்டும் இல்லாமல் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனாலும் தனுஷின் கேரியரில் ராயன் சூப்பர் ஹிட் படம் என்றே ரிஜிஸ்டர் ஆனது. தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவான ராயனுக்கு, தனது இசையின் மூலமாக உயிர் கொடுத்திருந்தார் இசைப் புயல் ஏஆர் ரஹ்மான். முக்கியமாக அடங்காத அசுரன் பாடலில் வரும் ‘உசுரே நீதானே’ என்ற அந்த ஒரு போர்ஷன் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. அதேபோல் வாட்டர் பாக்கெட் கானா பாடலும் செம ஹிட் அடித்தது.

இந்த இரண்டு பாடல்களுமே யூடியூப்பில் வீடியோவாக வெளியாகி அங்கேயும் பல மில்லியன் பார்வைகளை கடந்தது. இந்நிலையில் திரையரங்குகளைத் தொடர்ந்து நாளை (ஆக.23) முதல் அமேசான் ப்ரைம் தளத்திலும் ராயன் வெளியாகிறது. திரையரங்குகளில் ரிலீஸாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடிக்கு வந்துவிட்டது ராயன். ஆனால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ராயன் படத்துக்கு கோடிகளில் லாபம் கிடைத்துள்ளதாம். இதனால் மகிழ்ச்சியான சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ஜெயிலர் பட பாணியில் தனுஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. 

மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், அனிருத் மூவருக்கும் காசோலை கொடுத்ததோடு, 1.5 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களையும் பரிசாக வழங்கினார். அதேபோல், இப்போது ராயன் வெற்றிக்காக தனுஷுக்கு இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார் கலாநிதிமாறன். அதில் ஒன்று இயக்குநர் தனுஷுக்காகவும், இன்னொன்று ஹீரோ என்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரஜினிக்கு கொடுத்ததை போல தனுஷுக்கு சொகுசு கார் மட்டும் பரிசாக கொடுக்கப்படவில்லை. விரைவில் அதுவும் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷை போல ஏஆர் ரஹ்மானுக்கும் விரைவில் காசோலை கொடுக்க கலாநிதிமாறன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.  

முன்னதாக ராயன் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினருக்கும், சினிமா செய்தியாளர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார் தனுஷ். திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் – சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வெளியான ராயனும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow