ஆஷாட நவராத்திரி.. வாராஹி அம்மனுக்கு பஞ்சமி அபிஷேகம்.. திருக்கல்யாணம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் வாராஹி (ஆஷாட) நவராத்திரி விழா சிறப்பு பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன், வருகிற 10 ம் தேதி, ஸ்ரீ வராஹி அம்மனுக்கு உகந்த ரீதியான பஞ்சமி நாளில் சிறப்பு அபிஷேகமும் அருள்மிகு உன்மத்த பைரவி (வராஹி), சமேத உன்மத்த பைரவர் சுவாமிக்கு, திருக்கல்யாணமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Jul 8, 2024 - 18:27
Jul 9, 2024 - 11:00
 0
ஆஷாட நவராத்திரி.. வாராஹி அம்மனுக்கு பஞ்சமி அபிஷேகம்.. திருக்கல்யாணம்
Varahi Amman Wedding At Walajapet

வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி விழா ஆண்டுக்கு நான்கு முறை கொண்டாடப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி வாராஹி நவராத்திரி என்றும், குப்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுறது. இவ்விழா 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. 

சமீப காலமாகத்தான் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் பிரபலமாகி வருகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழன் வராஹி அம்மனை உபாசனை செய்திருக்கிறார் என்றும் வாராஹி அம்மனின் தீவிரமான பக்தர் என்றும் கூறப்படுகிறது.

சப்த கன்னிகளில் ஒருவரான வாராஹி அம்மன் அம்பிகையின் படைத்தளபதி ஆவார். போர்களில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கும் எதிரிகளை அழிப்பதற்கும் வராஹி அம்மனை வணங்கிச் சென்றாலே போதுமானது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது.உலகையே ஆண்ட ராஜராஜ சோழனுக்கு மாபெரும் வெற்றிவாகை சூட உதவியது வாராஹி அம்மன் வழிபாடு தான் என்று கூறப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.இதை பஞ்சமுக வாராஹி (சூலினி, காளி, திரிபுர பைரவி, பகுளாமுகி, வாராஹி) ஐந்து முகங்கள் கொண்டு கண்ணாடி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பஞ்சமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறும்.

இந்த நிலையில், ஜூலை 5 ஆம் தேதி ஆனி அமாவாசை நாளில் வாராஹி நவராத்திரி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அமாவாசை தொடங்கி  நவமி வரை 10 நாட்களுக்கு ஸ்ரீ சப்தமாதர்களுக்கும், ஸ்ரீ பஞ்சமாதர்களுக்கும், ஸ்ரீ நவகன்னிகைகளுக்கும்,ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ பலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ முகாம்பிகை, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி,  ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ ராஜ காளி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ ஆரோக்கியலக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ அனுசுயா தேவி, ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ நாககன்னி, ஸ்ரீ காயத்திரி தேவி, ஸ்ரீ மாமேரு மற்றும் ஸ்ரீ மஞ்சமாதா என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தேவிக்கும், ஒவ்வொரு விதமான அபிஷேக அலங்காரம் நடைபெறும். இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு வாழ்க்கையில் வளம் பெற பிராத்திக்கின்றோம்.


ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன், வருகிற 10 ஆம் தேதி, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த ரீதியான பஞ்சமி நாளில் சிறப்பு அபிஷேகமும் அருள்மிகு உன்மத்த பைரவி (வராஹி), சமேத உன்மத்த பைரவர் சுவாமிக்கு, திருக்கல்யாணமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.வராஹி நவராத்திரியின் முதல் நாள் காலை  கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஜூலை 15 ல் வராஹி நவராத்திரி விழா நிறைவடைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow