Vanangaan Trailer: “இன்னைக்கு தேதில இவன் தான் சூப்பர் ஸ்டார்..” வெளியானது பாலாவின் வணங்கான் ட்ரைலர்!
Vanangaan Tamil Movie Trailer Released Now : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Vanangaan Tamil Movie Trailer Released Now : சூர்யா – இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான். சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த வணங்கான் திடீரென ட்ராப் ஆனது. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஸ்க்ரிப்ட் விஷயத்தில் சின்ன கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் சூர்யாவுக்கு 10 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது தனிக் கதை. நந்தா, பிதாமகன் என சூர்யாவுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் இயக்குநர் பாலா(Bala). அப்படியிருந்தும் வணங்கான் படத்தில் இருந்து விலகினார் சூர்யா.
இதனால் இந்தப் படம் மொத்தமாகவே ட்ராப் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் பாலா, வணங்கானில் அருண் விஜய்யை(Arun Vijay) ஹீரோவாக கமிட் செய்தார். பின்னர் மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அருண் விஜய் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், அவரது படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், அருண் விஜய்யும் பாலா போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என பல வருடங்களாக தவம் கிடந்தார். இறுதியாக சூர்யாவின் முடிவால் பாலா – அருண் விஜய் கூட்டணி வணங்கானில் இணைந்தது.
அருண் விஜய்யுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், வணங்கான் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வணங்கான் ட்ரைலருக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்க, தற்போது அது வெளியாகியுள்ளது. ஆனால், இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் இதில் பாலாவின் டச் இல்லையென்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல் அருண் விஜய்யின் கெட்டப், அப்படியே பிதாமகன் படத்தின் சித்தா கேரக்டர் விக்ரம் மாதிரியே இருப்பதாக கூறியுள்ளனர்.
இதெல்லாம் கடந்து வணங்கான் படத்தின் கதையோ அல்லது கதைகளமோ எதுவும் ரசிகர்களிடம் கனெக்ட் ஆகவில்லை எனத் தெரிகிறது. சூர்யா விலகியதால், இந்த கதையை இன்னும் தரமாக மாற்றி பாலா இயக்கியிருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், வணங்கான் ட்ரைலர் அதற்கு நேர்மாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தப் படம் வெளியானதும் ஏதேனும் மேஜிக் நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?