ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கை மாறிய பணம் எவ்வளவு? போலீஸ் கஸ்டடியில் உண்மை வெளிவருமா?

ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய 10 நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் மது அருந்தியபடியே திட்டம் தீட்டியதும், ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புப் பகுதிகளில் குறிவைத்து வெட்ட வேண்டும் என்றும் குற்றவாளிகள் பேசியுள்ளனர்.

Jul 12, 2024 - 11:50
 0
ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கை மாறிய பணம் எவ்வளவு? போலீஸ் கஸ்டடியில் உண்மை வெளிவருமா?
Amstrong murder case

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். 11 பேரை 5 நாட்கள்  காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், யாருடைய தூண்டுதலின் பேரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் கை மாறிய பணம் எவ்வளவு என்ற கோணத்தில் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி வழங்குவது போல் இருசக்கர வாகனங்களில் வந்து ஆறு பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆன ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை செம்பியம் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 பேரை 5 நாட்கள்  காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து 11 பேரிடமும் செம்பியம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலின் பேரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்கள்? எத்தனை கோடி பணம் கைமாறியது என்ற கோணத்தில் போலீசார் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது. 

ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய 10 நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் மது அருந்தியபடியே திட்டம் தீட்டியதும், ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புப் பகுதிகளில் குறிவைத்து வெட்ட வேண்டும், என்றும் மிஸ் ஆகிவிடக் கூடாது என்றும் பொன்னை பாலு தனது கூட்டாளிகளிடம் சொன்னதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றது. பெரம்பூர் பகுதி சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை தொடர்கிறது.

இந்த நிலையில் கைதான 11 பேரை ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொன்ற இடமான பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவிற்கு அழைத்து சென்று கொலை செய்தது எப்படி? என்பது தொடர்பாக 11 பேரும் நடித்து காட்டி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்தால் ஏதேனும் பிரச்சினை நிகழ் வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். அதனால் 11 பேரிடமும் தனித்தனியாக வைத்து கொலை நடந்த இடத்தில் இருந்து போலீசார் வீடியோ கால் மூலம் காட்டி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதாவது சம்பவ இடத்தில் போலீசார் வீடியோ கால் மூலம் காட்டி 11 பேர் அந்த பகுதிக்கு வந்தது எப்படி? யாரெல்லாம் என்னென்ன செய்தார்கள்? ஆயுதங்களோடு எந்த தெருவில் பதுங்கி இருந்தீர்கள்? உள்பட பல்வேறு விதங்களில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow