பள்ளிக்கல்வித் துறை சரியான திசையில் செல்லவில்லை – தமிழிசை செளந்தரராஜன்

பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Sep 7, 2024 - 03:34
Sep 7, 2024 - 03:35
 0

திருவல்லிக்கேணியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் சிறப்பு விருந்தினராக தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு, ஊர்வலத்தைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “விநாயகர் வைப்பதற்கு தமிழகத்தில் அவ்வளவு போராட வேண்டி இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. ஐதராபாத்தில் ஒற்றைச் சாளர மூறை பயன்படுத்தப்படுவதால், எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் விநாயகர் வைக்கப்பட்டு கரைக்கப்படுகிறது.

பக்தர்களை பாதிக்காமல், பரிதவிக்கவிடாமல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், விநாயகர் சிலையை வைக்கவும் தமிழக அரசு வழி அமைக்க வேண்டும். தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை முறையாகத்தான் நடைபெறுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. பல இடங்களில் மாணவர்களை கழிப்பறை சுத்தம்  செய்ய வைக்கின்றனர். போலி என்.எஸ்.எஸ் முகாம்கள் நடத்தி பாலியல் குற்றங்கள் வரை நடைபெறுகிறது.

ஜாதியை வேற்றுமையால் மாணவர்கள் தென்பகுதியில் தாக்கப்படுகிறார்கள். இன்று ஆசிரியர்களுக்கு பாத பூசை செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது அவர்களுக்கு மரியாதை செய்வது. இது நமது கலாச்சாரத்தோடு ஒன்றியது.

ஒரு சொற்பொழிவு நடைபெற்றதற்கு தலைமை ஆசிரியருக்கு பணியிட மாற்றம் செய்வதற்கு பதிலாக அமைச்சர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. அனுமதி வாங்கி இருக்கிறார்கள், அதற்கு பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

எதை எடுத்தாலும் அதை ஆர்.எஸ்.எஸ். உடன் இணைப்பது தவறானது. ஆர்.எஸ்.எஸ். ஒரு சேவை இயக்கம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சேவையை ப் பார்த்துதான் பாஜக கட்சியில் இணைந்துள்ளோம். எதற்கெடுத்தாலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராடினார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எந்த வழிமுறை மற்றும் விதிமுறை இல்லாமல் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை இந்த நபர் பார்த்து இருக்கிறாரே அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள். முதலாக பள்ளி கல்வித்துறை சரியான பாதையில் செல்கிறதா என்று பதில் சொல்லட்டும். 

பள்ளிக்கல்வித்துறை இதற்கு அனுமதி அளித்தார்களா? அளிக்கவில்லையா ஏன் சொற்பொழிவாளர் இவர்களை பார்த்திருக்கிறார்கள் பார்க்கவில்லையா என்று பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow