ஆம்ஸ்ட்ராங் கொலையின் சூத்திரதாரி யார்?.. குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகளை அலசும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் வங்கி கணக்குகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ராமு வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வங்கியிலும் கைது செய்யப்பட்ட 11 பேரின் 6 மாத வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jul 12, 2024 - 12:10
Jul 12, 2024 - 12:48
 0
ஆம்ஸ்ட்ராங் கொலையின் சூத்திரதாரி யார்?.. குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகளை அலசும் போலீஸ்
Amstrong murder case

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 11 பேரையும் செம்பியம் போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

11 பேரையும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எவ்வளவு பணம் வாங்கப்பட்டது? யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது தொடர்பாக 11 பேரிடமும் தனித்தனியாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வெளியான சிசிடிவியில் தென்மாவட்ட கத்தியோடு ஓடி வந்தவர் கைதான ராமு என்ற வினோத் என்றும், சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் கைது செய்ததாக தெரிய வந்துள்ளது.  கைதான ராமு ஆற்காடு சுரேஷின் மாங்காடு கிளப்பில் ஊழியராக வேலை செய்தவர்.

மேலும் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ராமு வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  வங்கியிலும் கைது செய்யப்பட்ட 11 பேரின் 6 மாத வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தியும், வேறு நபர்களின் இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்கை 10 நாட்களாக கொலை கும்பல் பெரம்பூர் பகுதியில் நோட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கைதான திருமலையோடு சேர்ந்து பெரம்பூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தனது கும்பலோடு மது அருந்திய படியே எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 
ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்பு பகுதிகளை குறிவைத்து வெட்டவும், மிஸ் ஆகக்கூடாது என பாலு தனது கூட்டாளிகளிடம் தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் கைதான 11 பேரை ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொன்ற இடமான பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவிற்கு அழைத்து சென்று கொலை செய்தது எப்படி? என்பது தொடர்பாக 11 பேரும் நடித்து காட்டி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்தால் ஏதேனும் பிரச்சினை நிகழ் வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். அதனால் 11 பேரிடமும் தனித்தனியாக வைத்து கொலை நடந்த இடத்தில் இருந்து போலீசார் வீடியோ கால் மூலம் காட்டி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதாவது சம்பவ இடத்தில் போலீசார் வீடியோ கால் மூலம் காட்டி 11 பேர் அந்த பகுதிக்கு வந்தது எப்படி? யாரெல்லாம் என்னென்ன செய்தார்கள்? ஆயுதங்களோடு எந்த தெருவில் பதுங்கி இருந்தீர்கள்? உள்பட பல்வேறு விதங்களில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மூன்று பேரை பிடித்து  செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. திமுகவை சேர்ந்த அருள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் செல்போனில் இருந்து கிடைக்கப்பெற்ற எண்களை வைத்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow