தமிழ் சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்.. அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் காரி துப்புங்கள்.. சனம் ஷெட்டி கொதிப்பு

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் இந்த படம் என்றால் காரி துப்பி விட்டு வெளியே சென்று விடுங்கள் அந்த படமே வேண்டாம் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து இன்னொருவர் உங்கள் மீது மதிப்பு வைத்து வழங்குவார்கள் என்று சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

Aug 20, 2024 - 17:19
Aug 21, 2024 - 10:15
 0
தமிழ் சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்.. அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் காரி துப்புங்கள்.. சனம் ஷெட்டி கொதிப்பு
actress sanam shetty

மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் பெண் நடிகர்களுக்கு பாலியல் சீண்டல்களும் அட்ஜெஸ்மெண்ட்களும் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளதாக நடிகை ஷனம் ஷெட்டி குற்றசாட்டியுள்ளார்.பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நவீன நங்கையர் பவுண்டேஷன் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.


பாலியல் துன்புறுத்தல்:

கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி சம்பவங்களை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நவீன நங்கையர் பவுண்டேஷன் சார்பில்  நடிகை ஷனம் செட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு வாரத்திற்கு நான்கு வழக்குகள் வருகிறது. கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரியில் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் குறிப்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே அதில் குற்றவாளியாக இருக்கிறார். பெங்களூரில் இரு சக்கர வாகனத்தில் லிஃப்ட்  கேட்டு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவிகளை பூனேவில் கழிவறையில்  வைத்து அந்த பள்ளியில் இருக்கும் பணியாளர்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


பாதுகாப்பு கேட்டு போராட்டம்:

பெண்களை பாதுகாப்பாக உடை அணியுங்கள் என சொல்லிக்  கொடுங்கள் என கூறும் நீங்கள் ஆண் பிள்ளைகளுக்கும் சற்று கற்று கொடுங்கள்.அதற்கான ஒரு  பணிகளை  முன்னெடுத்து தான் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம் இப்போது இருக்கும்  பாதுகாப்பு  போதாது என்பதை வலியுறுத்தும் வகையில் தண்டனை கடுமையாக வழங்க வேண்டும் உடனடியாகவும் கொடுக்க வேண்டும் பிறகு பெண்களை தொடுவதற்கு பயப்படுவார்கள்.போராட்டத்துக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை 29ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம் என அனுமதி கேட்டிருந்தோம் ஆனால் வேறு ஒரு தினத்திற்கு மாற்றம் செய்து தருவதாக கூறி இருக்கிறார்கள். காவல்துறையின் உதவி இல்லாமல் இந்த போராட்டத்தை எங்களால் நடத்த முடியாது எல்லாரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் ஆண் பெண் என பிரித்து பார்க்க கூடாது.

எங்கும் பாதுகாப்பு இல்லை: 

 இந்தியாவில் மட்டும் தான் இது நடக்கிறதா இல்லையா என்பது இல்லை உலகம் முழுவதும் இதே பிரச்சினை தான் எங்கும் பாதுகாப்பில்லை எனவும் அவர் கேட்டு கொண்டார்.கேரளா அசோசியேஷன் எம் ஆர் கமிட்டி அறிவித்த அறிக்கை இதுபோன்று தமிழ் சினிமா துறையில் நடக்கிறதா என்றால் நிச்சயம் நடக்கிறது இரண்டு நாட்கள் முன்பு  வீடியோவில் நான் கூறியிருக்கிறேன் அன்றையே சொல்லி இருக்கலாம் என அப்பவே சொல்லி இருக்கேன் செருப்பாலே அடிப்பேன் நாயே என நானே சொல்லி இருக்கிறேன். 

காரி துப்புங்கள்:

அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் ப்ராஜெக்ட் கிடைக்கும் என கூறினால் அங்கேயே ஃபோன் ஆஃப் செய்து விடுவேன். நானே அங்கு சென்று லாக் ஆகும் சிச்சுவேஷனை ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன் எப்போ எந்த விஷயம் நடந்தாலும் அப்பவே பேசுங்கள் எல்லாருமே இப்படியா என்றால் கிடையாது.இப்ப வரைக்கும் நான் நடித்த அனைத்து படங்களும் நல்ல முறையில் எடுக்கபட்ட படங்கள் தான், நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இதுபோன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் இந்த படம் என்றால் காரி துப்பி விட்டு வெளியே சென்று விடுங்கள் அந்த படமே வேண்டாம் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து இன்னொருவர் உங்கள் மீது மதிப்பு வைத்து வழங்குவார்கள்.

வரி செலுத்தி பிரயோசனம் இல்லை:

மலையாளத்தில் இரண்டு படம் நடித்துள்ளேன் என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். நல்ல முறையில் நடந்து கொள்பவர்களை நாம் புறம் தள்ளக்கூடாது. உங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு  அங்கேயே அப்பவே வெளியே தெரிவியுங்கள் அப்போதுதான் பெண்களுக்குள் ஒற்றுமை நிச்சயம் வரும்.  நம் உரிமைக்காக நாம் போராடி தான் ஆக வேண்டும் அனைத்துக்கும் வரி செலுத்துகிறோம் வரி செலுத்தி என்ன பிரயோஜனம் ஒரு பாதுகாப்பு கூட இல்லை , ஏன் எதற்கு என கேள்வி கேளுங்கள் கேட்டுகிட்டே தான் இருக்க வேண்டும் எனவும் சனம் ஷெட்டி தெரிவித்தார்.


கொந்தளிக்கும் சனம் ஷெட்டி:


கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்தை நடிகை சனம் ஷெட்டி வன்மையாக கண்டித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி, அதில், நாம் மகாலட்சுமி தேவியை கொண்டாடி வருகிறோம். அதே சமயம், நடமாடும் தெய்வமாக பார்க்கப்படக்கூடிய பெண்கள் கொலை செய்யப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து 30 மணி நேரமாக மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற நினைத்த அந்த டாக்டர் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டுள்ளார். அவளின் கடைசி நேரத்தின் அழுகையும், அவல நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இது வலிமை மற்றும் புரிந்து கொள்வதற்கான நேரம் இல்ல. இது கோபத்திற்கான நேரம்.

நீதி வேண்டும்:

கொல்கத்தாவில் இருக்கும் துணிச்சலான மக்கள் அந்த இரவே போராட்டத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் உங்களிடம் ஏற்கனவே இருந்ததை மட்டுமே நீங்கள் மீட்டெடுக்க முடியும். பெண்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை நாம் அனைவரும் ஒன்றிணைத்து மீட்டெடுக்க வேண்டும். சென்னையில் 'கிளைம் தி நைட்' என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்க விரும்புகிறேன். இரவும் ஆண்களுக்கு மட்டும் தான் சொந்தமா?.அனைத்து மனித குலத்திற்கும் எதிரான இந்த கொடூரமான குற்றத்திற்கு உடனடி நீதி கோரி இந்த அமைதிப் பேரணியில் என்னுடன் சேருமாறு எனது நண்பர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள், ஊடக சகோதரர்கள் மற்றும் மனிதநேயம் மற்றும் நீதியின் மீது இன்னும் நம்பிக்கை கொண்ட அனைவரையும் அழைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow