தில்ராஜா படத்தில் தில்ராஜூ டயலாக்கில் பாடல். ‘தில்’ ஆக வெளியிடுபவர் யார் தெரியுமா?

Dilraja Movie Song Release with Producer Dilraju : இந்த பாடல் குறித்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூவிடம் பேச இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்தே இந்த பாடலை வெளியிடவும் ஐடியா இருக்குது. அவர் பிசியாக இருக்கிறார்.

Jul 22, 2024 - 17:04
Jul 22, 2024 - 17:41
 0
தில்ராஜா படத்தில் தில்ராஜூ டயலாக்கில் பாடல்.  ‘தில்’ ஆக வெளியிடுபவர் யார் தெரியுமா?
தில்ராஜா ,தில்ராஜூ

Actor Vijay Sathya Dilraja Movie Song Release with Producer Dilraju : விஜய் நடித்த பகவதி, சரத்குமார் நடித்த ஏய், சிம்பு நடித்த குத்து உட்பட பல கமர்ஷியல் படங்களை இயக்கிய ஏ.வெங்டேஷின் அடுத்த படம் தில்ராஜா(Dilraja Movie). விஜய் சத்யா(Vijay Sathya), பிக்பாஸ் புகழ் ஷெரின் நடித்துள்ளனர். நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.  விஜயின்  வாரிசு பட பிரமோஷன் நிகழ்ச்சியில் அந்த பட தயாரிப்பாளர் தில்ராஜூ  பேசிய ‘‘ படத்துல டான்ஸ் வேணுமா, டான்ஸ் இருக்குது, பைட் வேணுமா  பைட் இருக்கு’’ என்ற வசனம் பெரியளவில் வைரல் ஆனது. அந்த வரிகளை வைத்து இந்த படத்தில் ஒரு ஜாலியான  பாடலை உருவாக்கியிருக்கிறார் அம்ரிஷ். தவிர, ஹீரோவுடன் இணைந்து அந்த பாடலுக்கு டான்சும் ஆடியிருக்கிறார். 

இது வம்புதானே? இப்படியொரு பாட்டு தேவையா? தலைப்பும் தில்ராஜானு இருக்குதே என்று ஹீரோவிடம் கேட்டால் ‘‘எங்களுக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. இது வேறு மாதிரி ஜானர். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு ஒரு பிரச்னை வருது. எதிரே இருப்பவர்கள் பெரிய டீம். நான் தில்ராஜாவாக மாறி என்ன செய்கிறேன் என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக காண்பித்து இருக்கிறோம். 3 நாளில் கதை நடக்கிறது. உண்மையில் இந்த பாடல் குறித்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூவிடம் பேச இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்தே இந்த பாடலை வெளியிடவும் ஐடியா இருக்குது. அவர் பிசியாக இருக்கிறார்.விரைவில் அப்பாயின்மென்ட் வாங்கி சந்திக்க இருக்கிறோம். அவர் பாசிட்டிவ் ஆன நபர். எங்களுக்கு ஆதரவு கொடுப்பார். இந்த டயலாக் பிரபலம் என்பதால், அதையே பாடல் வரிகளாக மாற்றிவிட்டோம்.அம்ரிஷ் கெட்டப்புக்கு ஏதாவது போன் வரும்னு நினைத்தோம். எதுவும் நடக்கவில்லை ’’ என்கிறார். 

ஷெரின் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறாரே என்றால், ‘‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் அவருக்கு தனி மவுசு ஏற்பட்டு இருக்கிறது. பாடல் காட்சிகளில் மட்டும் சற்றே கிளாமராக வருகிறார். அவரும் கதைக்காக உள்ளே வந்தார்.  கேபிஓய் பாலாவும் முக்கிய வேடத்தில் வருகிறார். அவருக்கு படப்பிடிப்புதளத்தில் அவ்வளவு மரியாதை. அவரை பார்க்க அவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிறார். பகவதி படத்தின் மூலம் விஜயை ஆக் ஷன் ஹீரோ ஆக்கியதில் ஏ.வெங்கடேசுக்கு பங்கு உண்டு.  சிம்புக்கு குத்து என்ற கமர்ஷியல் படத்தை கொடுத்தவர். இன்றைக்கும் ஏய் பட பாடல்கள் பிரபலம். அவர் பாணியே கமர்ஷியல் பாணி. அந்த டச் இதிலும் இருக்கும். அங்காடிதெரு படத்தின் மூலம் அவரும் பிரபல நடிகர் ஆகிவி்ட்டார். தில்ராஜா படத்தில் அவரே வில்லனாகவும் நடித்து இருக்கிறார்’’ என்கிறார்

‘தில்ராஜா’ என்ற தலைப்பு வைக்க தனி காரணம் இல்லை. எல்லாரும் தைரியமானவர்கள்தான். அதை காண்பிக்க முடியாது. அவங்க சூழ்நிலை, லிமிட் காரணமாக அமைதியாக இருக்கிறோம். ஒரு பிரச்னை வந்தால் அந்த தைரியம் வெளிப்படும் என்பதால் இந்த தலைப்பு.  இந்த பாடல் வரிகள், தில்ராஜூ பாடலால் எந்த பிரச்னையும் வராது’ என்கிறார்


**

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow