GOAT Movie Box Office Collection 6th Day Report : தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான தி கோட் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த வாரம் ரிலீஸானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. இதனால் ஒரே நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரள வைத்தது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட். விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் 142 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது. இந்த சாதனையை தற்போது ரிலீஸான கோட் பிரேக் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லியோவை விட கொஞ்சம் குறைவாகவே வசூலித்தது கோட்.
அதேநேரம் முதல் நாளின் முடிவில் கோட் படத்தின் சில காட்சிகள் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டன. விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பைப் பெற்றாலும், விஜய்யின் லுக், விஜயகாந்தின் ஏஐ வெர்ஷன், லாஜிக் இல்லாத திரைக்கதை ஆகியவை விமர்சனத்துக்கு உள்ளாகின. இதனால் இரண்டாவது நாளில் இருந்தே கோட் படத்துக்கு ரசிகர்களிடம் இருந்த ஹைப் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அதேநேரம் விஜய்க்காக திரையரங்குகளுக்குச் சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இதனால் கோட் படத்தின் வசூல் ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியே இருந்தது. அதன்படி, 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கோட் படக்குழு அறிவித்தது. கோட் ரிலீஸாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்த வசூல் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 100 முதல் 150 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாம் கோட். தெலங்கானா, ஆந்திராவில் 20 முதல் 30 கோடியும், கர்நாடகாவில் 25 முதல் 30 கோடியும் வசூலித்துள்ளதாம். அதேபோல், கேரளாவில் 15 முதல் 20 கோடி ரூபாயும், இந்தியில் 10 கோடி அளவிலும் கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா!
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 30 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோட் ரிலீஸாகி இன்றோடு ஒரு வாரம் ஆகவுள்ளதால், இதற்கு மேல் பெரியளவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இருக்காது எனத் தெரிகிறது. இதனால் விஜய்யின் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கனவு நனவாக வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விஜய்யின் மெர்சல் 260 கோடியும், சர்கார் 265 கோடி ரூபாயும் வசூலித்தன. அதேபோல், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் தலா 300 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தன. விஜய் நடிப்பில் வெளியான லியோ மட்டுமே இதுவரை 600 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் போது, எடிட்டிங் இல்லாமல் முழு வெர்ஷனும் ஸ்ட்ரீமிங் ஆகும் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அதன்படி, ஓடிடியில் வெளியாகும் கோட் படத்தின் ரன்னிங் டைம், 3 மணி நேரம் 40 நிமிடங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. டைரக்டர் கட் என சொல்லப்படும் இதில், விஜய் ரசிகர்களுக்கு இன்னும் சில தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.