சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

Feb 7, 2025 - 16:13
 0
சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆலப்பாக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சிறுவன் மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார். சிறுவனுடன் வேறு யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அந்த இளைஞர், “நான் சினிமாவில் நடிகனாக இருக்கிறேன்.... எனக்கு நிறைய நடிகர்களை தெரியும்” என நைஸாக பேச்சுக் கொடுத்துள்ளார். 

அப்படியே பேசி சிறுவனை நம்ப வைத்த அந்த இளைஞர், தனது செல்போனில் நடிகர்களின் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறி, பூங்கா உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் செல்போனில் உள்ள போட்டோகளை காட்டியபடியே, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற அந்த சிறுவன், பூங்காவில் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியான அவர்கள், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். 

புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், பூங்கா அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை உறுதி செய்த போலீஸார், சிசிடிவி வீடியோவை வைத்து ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த அரி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், பூங்காவிற்கு வரும் சிறுவர்களை இதுபோல சினிமா பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. பாலின பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow