Rishikanth : சிவகார்த்திகேயன் பட வில்லன் மீது தாக்குதல்.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

Actor Rishikanth Attack : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ரிஷிகாந்த் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Feb 7, 2025 - 14:00
Feb 7, 2025 - 14:41
 0
Rishikanth : சிவகார்த்திகேயன் பட வில்லன் மீது தாக்குதல்.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
ரிஷிகாந்த்

Actor Rishikanth Attack : சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகாந்த். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இவர் நேற்று (பிப்.5) இரவு சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  மதுபோதையில் இருந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் நடிகர் ரிஷி காந்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

திடீரென ரிஷி காந்த்தை ஆபாசமாக திட்டி தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரிஷிகாந்த் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இதையடுத்து ரிஷிகாந்த் இன்று காலை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தாக்குதல் நடத்திய ஹரீஷை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஹரீஷ் கார் ஷோரூமில் பணியாற்றி வருவது தெரியவந்தது. தொடர்ந்து, நட்சத்திர ஓட்டலில் பெண் ஒருவருடன் நடனமாடி கொண்டிருந்ததாகவும் இதைப் பார்த்து நடிகர் ரிஷிகாந்த் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஹரீஷ் பார்க்காங்கில் தனது காரை எடுப்பதற்காக, ரிஷிகாந்த் சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow