நாட்டின் அடையாளத்தை மாற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அடையாளத்தை மாற்றுவதற்கு  உதவ வேண்டும் என  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Feb 7, 2025 - 06:47
 0
நாட்டின் அடையாளத்தை மாற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆங்கில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, லால், வினய், லஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டிஜே பானு, ஜான் கோகேன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில், நான்கு கிராமி விருதுகள் வென்ற எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க: Vidaamuyarchi Twitter Review: விடாமுயற்சி வீண் முயற்சியா..? அஜித் வெற்றி பெறுவாரா..? எக்ஸ் விமர்சனம் இதோ

இதில் ஏ.ஆ.ரகுமான் கலந்து கொண்டதால் நிகழ்ச்சியை காண இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இப்படி பிசியாக வலம் வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும்நாட்டின் பிம்பத்தை (அடையாளத்தை) மாற்றுவதற்கு  உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். இவ்விழாவில் உரையாற்றிய அவர்,  மனிதனின் வளர்ச்சிக்காக ஆராய்ச்சிகள் நடப்பதும், நாட்டினுடைய பிம்பத்தை (அடையாளத்தை) மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் நடப்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

ஆகவே ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் நம் நாட்டின் அடையாளத்தை சர்வதேச அளவில் மேம்பட்டதாக மாற்றுவதற்கு எல்லைகளை கடந்து பணியாற்ற வேண்டும் என்று  கூறினார். இந்த விழாவில் நடிகை ரெஜினா, நடிகை ஐஸ்வர்யா மேனன் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர்  பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow