மாதவிடாய்னு கூட பார்க்காம.. மாமியார் செய்த கொடுமை.. விவாகரத்தில் முடிந்த மூடநம்பிக்கை!
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
![மாதவிடாய்னு கூட பார்க்காம.. மாமியார் செய்த கொடுமை.. விவாகரத்தில் முடிந்த மூடநம்பிக்கை!](https://kumudamnews.com/uploads/images/202502/image_870x_67a5d7ff5eb78.jpg)
மத்திரபிரதேசம் மாநிலம் போபாலில் சேர்ந்த பெண் ஒருவருக்கு தான் இந்த கொடுமை ஏற்பட்டுள்ளது. இவரி மாமியார் மூடநம்பிக்கைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளவராம். பழைய பழக்க வழக்கங்களை விடாமல் பின்பற்றி வரும் இவர், புதிதாக திருமணமான அந்த பெண்ணிடமும் இதை திணித்துள்ளார். எல்லாம் மாறிவிடும் என நினைத்துக்கொண்டு 4 மாதங்களை அவர் அங்கு ஓட்டியுள்ளார். ஆனால், மாமியாரின் இந்த மூடநம்பிக்கை அப்பெண்ணை வாட்டியுள்ளது. அதாவது தன்னுடைய மாதவிடாய் நேரத்தில் மாமியார் சமையல் அறை மற்றும் பூஜை அறைக்குள் நுழையக்கூடாது என உத்தரவிடுவது மட்டுமின்றி, மாதவிடாயின் போது 7 நாட்களுக்கு குளிக்கக்கூடாது என வினோதமான விதிமுறைகளை பின்பற்றக்கூறியிருக்கிறார். தன்னுடைய தாயின் இந்த நடவடிக்கையால் மனைவி பாதிக்கப்படுவது தெரிந்திருந்தும் இதைபற்றி பெண்ணின் கணவர் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான அந்த மருமகள் இதற்கு மேலும் பொறுக்கமுடியாது என கணவரிடம் கூறிவிட்டு, விவாகரத்து கோரி போபால் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தை நாடியுள்ளார். விவாகரத்து மனுவில் மாதவிடாய் நேரங்களில் 7 நாட்களுக்கு குளிக்க கூடாது, பூஜை மற்றும் சமையல் அறைக்கு செல்லக்கூடாது என கூறி தன்னை ஒரு ரூமிலேயே அடைத்து வைத்துள்ளார். தான் வெளியே செல்லும்போதெல்லாம் தெரு நாய்கள் தன்னை பார்த்து குரைத்து துரத்துவதாக கணவரிடம் கூறினார், தன்னிடம் தீய சக்திகள் இருப்பதால்தான் நாய்கள் தன்னை துரத்துவதாக தன்னுடைய மாமியார் சொல்வதாகவும் அவர் வேதனையுடன் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த துன்புறுத்தல்களையெல்லாம் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் திருமணமான 4 மாதங்களில் தன்னுடைய தாய் வீட்டிற்கு நான் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற காலவதியான நம்பிக்கைகளை கொண்ட மக்கள் இன்னும் இவ்வுலகத்தில் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பியதுடன் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூட நம்பிக்கைகளால் சூழப்பட்ட தன்னுடைய திருமண வாழ்க்கையை உடைத்தெறிந்து அதிலிருந்து வெளியேறிய அப்பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)