திமுக-வுக்கு ரூட் போடும் நயினார்..? முதல்வருடன் டைரக்ட் LINK... நெல்லை பாஜக-வில் குழப்பம்?

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அடிக்கடி மாண்புமிகு ஒருவரை சந்தித்துவருவதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல தற்போது முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையை பகிருந்திருக்கிறார் நயினார். நெல்லை பாஜகவில் நடப்பது என்ன? திமுகவிற்கு தாவுகிறாரா நயினார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Feb 7, 2025 - 15:17
 0
திமுக-வுக்கு ரூட் போடும் நயினார்..?  முதல்வருடன் டைரக்ட் LINK...  நெல்லை பாஜக-வில் குழப்பம்?
நயினார் நாகேந்திரன்

அதிமுக முன்னாள் அமைச்சரும், நெல்லையில் பவர்ஃபுல் நபராக வலம் வந்த நயினார் நாகேந்திரனை ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓரம்கட்டினார் எடப்பாடியார். இதனால் அதிருப்தியில் பாஜகவுக்கு வந்து அவர் இணைந்த கதையை அனைவரும் அறிவர்.

பாஜகவில் இணைந்த அவருக்கு எடுத்த எடுப்பில் மாநில துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது தமிழிசை சௌந்தரராஜன் மாநில தலைவராக இருந்தார். இதன் பிறகு தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட, பாஜக மாநில தலைவருக்கான ரேஸ் தொடங்கியது. மாநில தலைவராகி தனக்கான தனி இடத்தை தக்கவைக்க வேண்டும் என நயினார் போட்ட கணக்கு தப்பியது. மாநில தலைவராக எல்.முருகன் தேர்வானது தொடங்கி, பிறகு அண்ணாமலை வரை நியமிக்கப்பட்டுவிட்டனர். இதனால் நயினாரின் மாநில தலைவர் கனவு அப்போது தொடங்கி, தற்போது வரை பலிக்காமலேயே இருந்து வருகிறது. இப்படி இங்குள்ள மாநில கதவுகள் மூடப்பட்டுவிட்டாதால், டெல்லியின் கதவை தட்டலாம் என்ற முயற்சியில் மக்களவை தேர்தலில் களமிறங்கினார். ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. 

இதனால் டென்ஷனான நயினார், ”நெல்லையே என் கண்ட்ரோலாக்கும்” என கூறி, தான் திமுகவுக்கு சென்றுவிட்டால் பாஜகவுக்கு தான் பின்னடைவு எனவும் பாஜக தலைமையை மிரட்டி வருவதாக கமலாலய வட்டாரத்தில் பேசப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, வெளியில் கீரியும், பாம்பும் போல் அடித்துக்கொண்டாலும், நயினாரிடம் மட்டும் தனி பாசத்தை திமுகவின் மாண்புமிகுகள் காட்டி வருவதாக விவரமறிந்தவர்கள் தெரிவித்தனர். அதன்படி, திமுக நெல்லை பொறுப்பு அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு அடிக்கடி நயினாரை சந்தித்து வருவதாக தகவல் கசிந்தது. கருப்பசாமி பாண்டியணுக்கு பிறகு ஒரு தனிப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை தன்வசப்படுத்த சரியான லீடர் இல்லை என்பதால், அதற்கு சரியான ஆள் நயினார் தான் என முடிவு செய்து அவரை கே.என்.நேரு சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 7ம் தேதி கங்கைகொண்டான் சென்ற முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் டாடா பவர் சோலார் நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகுகள் மத்தியில் ODD ONE OUTஆக நின்றுக்கொண்டிருந்தார் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். பொதுவாக ஆளும் கட்சியான திமுக பிரதானமாக பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்தவர்களும் பங்கேற்கமாட்டார்கள். அனால் இந்த நிகழ்ச்சியில் நயினார் பங்கேற்றிருப்பது, டெல்லி தலைமையையே ஷாக்காக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நயினார் நாகேந்திரனை மேடையிலேயே வைத்துக்கொண்டு, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு கொடுக்க மறுத்ததை பற்றி பேசினார் முதலமைச்சர். 

முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு நயினார் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பது டெல்லி பாஜக தலைமையை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இதனால், திமுகவில் நயினார் நாகேந்திரன் இணையும் சூழல் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் கட்சிதாவுவதாக பாஜகவை மிரட்டி தனக்கான இடத்தை அக்கட்சியிலேயே தக்கவைத்துக்கொள்வாரா அல்லது திமுகவிற்கு சென்று நெல்லையில் அக்கட்சியை பலப்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow