சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 2026 ஜனவரிக்குள் 75000 பணியிடங்கள்.. சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இப்போதிருந்தே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் 110 விதி எண் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வரும் 2026 ஜனவரிக்கு 75000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

Jun 28, 2024 - 23:45
Jul 1, 2024 - 23:56
 0
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 2026 ஜனவரிக்குள் 75000 பணியிடங்கள்.. சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin Annouced TN Govt Employment

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த உடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த தேர்தலை அல்ல அடுத்த தலைமுறையை சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு. அரசு தேர்வாணையம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 65,483 இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நான் முதல்வன் திட்டம் மூலமாக சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டுள்ளது இதன் மூலம் மூன்று லட்சத்து 6459 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் முயற்சியினால் மூன்று ஆண்டுகளில் மொத்தம் 5.8 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 18 மாதத்திற்குள் பல்வேறு அரசு பணிகளுக்காக அரசு சார்பில் மொத்தமாக 46,534 பணிகள் நிரப்பப்படும் 

அரசு துறைகள் மட்டும் இன்றி சிறு குறு நிறுவனங்கள் மூலமும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் ஒன்றிய அரசின் தொழிலாளர் நிறுவனம் மூலம் பெறப்பட்ட தகவல்.

77,78,999 வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது , தொழிலாளர் வாய்ப்பு நிதி. நான் முதல்வன் திட்டம் மூலம் இவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
3,06,450 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நான் முதல்வன் திட்டம் மூலம் கிடைத்துள்ளது.2,01,596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.5,05,055 இளைஞர்களுக்கு ஒட்டுமொத்தமாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 

2026 ஆம் ஜனவரிக்குள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு 19,260 ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 3,401 மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 
6658 சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒட்டு மொத்தமாக 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும்.முக்கிய துறைகளில் 30,219 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணிகள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow