NEET PG 2024 Results : வெளியானது நீட் முதுகலை தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்துக்கொள்வது?
NEET PG 2024 Results : ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுக்ள வெளியானது.
ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதுகலை நீர் தேர்வுக்கான முடிவுக்ள வெளியானது.
NEET PG 2024 Results : முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறவிருந்தது. நீட் தேர் வு வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவற்றால் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது.
இதனால், முதுகலை நீட் தேர்வு நடைபெறுவதற்கு 12 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 11ம் தேதி இரண்டு ஷிப்ட் முறையில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 185 நகரங்களில் 500 மையங்களில் முதுகலை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 2,28,542 மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், வினாத்தாள் தேர்வு சர்ச்சை மட்டுமல்லாது, மேலும் பல சர்ச்சைகள் வெடித்தன. தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் வேறு மாநில்ங்களில் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்க, மீண்டும் தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகும், தேர்வு மையங்கள் பல கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்கு செல்ல கடினமாக இருந்ததாகவும், ரயில் கட்டணம் விமான கட்டணம் என பல செலவுகள் ஏற்பட்டதாகவும் கூறி இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “எண்ணற்ற நினைவுகளை சுமப்பேன்..” ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!
இந்நிலியில், முதுகலை நீட் தேர்வு 2024க்கான முடிவுகளை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்கள் முடிவுகளை https://natboard.edu.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
தேர்வுகளின் முடிவுகள் மட்டுமன்றி EWS, பொது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் MD/MS/DNB/Diploma படிப்புகளில் சேர்வதற்கான முதுகலை நீட் கட்-ஆஃப் மதிப்பெண்களையும் NBEMS பகிர்ந்துள்ளது.
What's Your Reaction?