‘கூலி’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘வேட்டையன்’ பாடலுக்கு நடனம்.. சூப்பர் ஸ்டார் வெறித்தனம்

‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ‘வேட்டையன்’ திரைப்பட பாடலான மனசிலாயோ பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Sep 16, 2024 - 02:01
Sep 16, 2024 - 02:14
 0
‘கூலி’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘வேட்டையன்’ பாடலுக்கு நடனம்.. சூப்பர் ஸ்டார் வெறித்தனம்
‘மனசிலாயோ’ பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்திற்கு பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் அக்டோபர் 10ம் தேதி 'வேட்டையன்' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் கூட்டணி வைத்துள்ளதால் 'கூலி' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளன. 'கூலி' படத்தில் இவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் 'சௌபின் சாஹிர்' கூலி படத்தில் 'தயாள்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' நாகார்ஜுனா 'கூலி' படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன்பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் 'பிரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு மொட்டை தலையுடன் சத்யராஜ் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டது. சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, சத்யராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ‘வேட்டையன்’ திரைப்பட பாடலான மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை களைகட்டி விட்டது என்று ரஜினி ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow