கல்யாணம்லாம் இல்ல... உண்மை என்னனா... விளக்கம் கொடுத்த வனிதா விஜயகுமார்!
Vanitha Vijayakumar : தனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் என பதிவிட்டிருந்த வனிதா விஜயகுமார் தற்போது அதற்கான விளக்கத்தைக் கொடுத்து ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Vanitha Vijayakumar : முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமானவர் வனிதா. முதல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்தார் வனிதா. 1995ம் ஆண்டு விஜய் ஹீரோவாக நடித்த சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வனிதா, அடுத்து ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்திலும் நடித்தார். வனிதா முன்னணியாக நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சுற்றி சர்ச்சைகள் மட்டுமே வலம் வரத் தொடங்கின.
2000ம் ஆண்டு ஆகஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட வனிதா, 2007ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் தொழிலதிபர் ஆனந்த் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார் வனிதா. இந்த திருமண வாழ்க்கையும் ஐந்தே ஆண்டுகளில் பிரிவை சந்தித்தது. அதன்படி இருவரும் 2012ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர் சிங்கிளாக வலம் வந்த வனிதாவுக்கு, டான்ஸ் மாஸ்டருடன் காதல் என செய்திகள் வெளியாகின. இதனால் இருவரும் சீக்கிரமே திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் வனிதாவும் ராபர்ட்டும்(Master Robert) ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் போய் நின்றது. அதோடு அதே ஆண்டில் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாவில் வனிதா பதிவிட்டுள்ள போட்டோ ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளது. அதாவது வரும் 5ம் தேதி தனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் கடற்கரையில் ரொமான்ஸ் செய்தபடி க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். இது உண்மையான திருமண அழைப்பிதழ் தானா, அல்லது ஏதும் படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் படிக்க: ‘இப்போ வருவீங்கள்ள!’.. பணம் டெபாசிட் ஆகாததால் ஏடிஎம் மெஷினை உடைத்த வாலிபர்
தற்போது அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்(Vanitha Vijayakumar). தனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் அவர் பதிவிட்டிருந்தது புதிய படத்தின் புரொமோஷன் எனத் தெரிவித்துள்ளார். Mr & Mrs எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் புரொமோவையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்த படத்தை இயக்கி அதில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் இப்படத்தினை ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார்.
What's Your Reaction?