ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்..... தென்னக ரயில்வேயின் மாஸ் அறிவிப்பு... இனிமேல் பிரச்சனையே இருக்காது!

ரயில்களில் படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு கூடுதலாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Sep 10, 2024 - 18:54
Sep 11, 2024 - 09:48
 0
ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்..... தென்னக ரயில்வேயின் மாஸ் அறிவிப்பு... இனிமேல் பிரச்சனையே இருக்காது!
ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.

திடீர் ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வார்கள். 2 அல்லது 3 முன்பதிவில்லாத பெட்டியுடன் பயணிக்கும் தொலை தூர ரயில்களில் கூட்ட நெரிசலில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் முதல் 2 அல்லது 3 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயிலில் (16343) ஜனவரி 20 முதல் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டு மொத்தம் 4  முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரை -  திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஜனவரி 21 முதல் 4 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும். 

இதேபோல் திருநெல்வேலி - மேற்குவங்க புரூலியா விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ஜனவரி இறுதி வாரம் முதல் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும். 

பாலக்காடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு,

புதுச்சேரி - கன்னியாகுமரி - புதுச்சேரி, 

விழுப்புரம் - கரக்பூர் - விழுப்புரம், 

புதுச்சேரி - மங்களூர் - புதுச்சேரி, 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம்,

திருவனந்தபுரம் வடக்கு - நீலாம்பூர் - திருவனந்தபுரம் வடக்கு,

மைசூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் காவிரி விரைவு ரயில், 

ஆலப்புழா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா,

திருவனந்தபுரம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம்,

நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், 

ஹைதராபாத் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத்,  

மேலும் படிக்க: கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? - முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

ஈரோடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் ஆகிய ரயில்களிலும் ஜனவரி இறுதி வாரம் முதல் சில இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு 4 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow