அண்ணாமலையார் கோயிலுக்கு தாமரை பூவுடன் வந்த பிரபல நடிகை...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரை வைத்துக் கொண்டு நடிகை நமிதா மனமுருக சாமி தரிசனம் செய்தனர்

Mar 18, 2025 - 16:16
Mar 18, 2025 - 16:22
 0
அண்ணாமலையார் கோயிலுக்கு தாமரை பூவுடன் வந்த பிரபல நடிகை...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
அண்ணாமலையார் கோயிலுக்கு தாமரை பூவுடன் வந்த பிரபல நடிகை...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திரைப்பட நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமிதா கையில் தாமரை பூவுடன்  தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் திருக்கோவில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Read more: பச்சை நிறமாக மாறிய வைகை அணை.. இதுதான் காரணமா?

இந்த நிலையில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம்  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த நடிகை நமீதா தனது கணவருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த அவருடன் பக்தர்கள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

நடிகை நமீதா சாமி தரிசனம்

அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரை வைத்துக் கொண்டு மனமுருக சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பிடாரி அம்மன் திருக்கோவிலுக்கு வந்த நமிதா பிடாரி அம்மனை தரிசித்ததுடன் வில்வ மரத்தில் சுற்றி வந்து தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பக்தர்கள் என அனைவருடனும் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய நமீதா தனது கையில் வைத்திருந்த தாமரை பூவை குழந்தைக்கு கொடுத்தார்.

Read more: அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow