நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி கிராமத்தில் மகா மாரியம்மன் நாகம்மன் கோவில் உள்ளது. குழந்தை பாக்கியம், திருமண தோஷ மற்றும் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும், விளங்கும் இக்கோவிலை சுற்றி தோட்டம் அமைந்துள்ளது.
தோட்டத்தில் விளைந்துள்ள வாழை மரத்தில் பக்தர்கள் திருமணத்தடை நிவர்த்திக்காக தாலி கட்டி பரிகாரம் செய்வது வழக்கம். அதுப்போல பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட ஒரு வாழை மரத்தில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து வாழைத்தாராக குலை தள்ளியுள்ளது. மேலும் வாழைப்பூவானது ஐந்து தலை நாகம் போல நெடு நெடுவென வளர்ந்துள்ளது.
இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அதிசய வாழைப்பூ தாராக வளர்ந்து வருவதை கண்ட பக்தர்கள், வாழை மரத்தில், மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து வழிபாடும் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாழைத்தாருடன் மறக்காமல் செல்பியும் எடுத்து வருகின்றனர். இச்செய்தி வெளியானது முதல் சுற்றுவட்டாரப்பகுதி மக்களும் அதிசய வாழைத்தாரை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
Read more: சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!