அண்ணாமலை மீதான மதிப்பீட்டை அவரே குறைத்துக்கொண்டார்- துரை வைகோ எம்.பி கருத்து
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.

அண்ணாமலை இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று சொல்வார்.ஆனால் சமீப காலமாக அவரின் நிலைப்பாடு குதர்க்கமாக உள்ளது.அவரின் அரசியல் நடவடிக்கையால், அவர் மீதான மதிப்பீட்டை அவரே குறைத்துக் கொண்டுள்ளார் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பிரச்னை
புதுக்கோட்டையில் திருச்சி எம்.பி.,துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொகுதி மறு சீரமைப்பு எவ்வளவு பெரிய கேடு, பாதகத்தை ஏற்படுத்தும். தமிழ்நாடு மட்டுமில்லாமல் வளர்ந்த மாநிலங்களை தண்டிக்கும் விதமாக மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை உருவாக்கியுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்யப்படும் போது வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.தொகுதி மறு சீரமைப்பின் போது வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும், அப்படி ஒரு சூழல் உருவாகும் போது தென் மாநிலங்களின் ஆதரவு தேவை இல்லாமல் போய்விடும். வட மாநில தொகுதிகளில் வெற்றி பெற்றாலே மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலை உருவாகும்.
தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாடு உரிமைகளை பறிக்கக்கூடியது, தமிழர்களுக்கு எதிரானது. தமிழக முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தை பொறுத்தவரை தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து பேசப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளது.
அண்ணாமலைக்கு பதில்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஒன்று பேசுவார் நாளை ஒன்று சொல்வார், ஆனால் சமீப காலமாக அவரின் நிலைப்பாடு குதர்க்கமாக உள்ளது. அவரின் அரசியல் நடவடிக்கை ல், அவர் மீதான மதிப்பீட்டை அவரே குறைத்துக் கொண்டுள்ளார்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தவறு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தமிழ்நாடு பொருத்தவரைக்கும் பாதுகாப்பான மாநிலம், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் சென்னை தான். டெல்லியில் தினமும் துப்பாக்கி சூடு, குண்டு வீசுதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது. தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற குற்றங்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவை பூரண மதுவிலக்கு.இது குறித்து முதலமைச்சரிடம் பல முறை நினைவுப்படுத்தி உள்ளோம். குற்றப் பின்னணிகளுக்கு மது ஒரு காரணமாக உள்ளது.இதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
விஜய்யின் வருகை
மதுக்கடைகளை குறைப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நிலைப்பாடு சரியாகத்தான் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது தான்,அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட அமைச்சர் பார்த்து நேரில் பேசி வலியுறுத்தி உள்ளேன். 2026 தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்சி தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மக்கள்தான் தீர்மானிக்க முடியும்” என்றார்.
What's Your Reaction?






