பச்சை நிறமாக மாறிய வைகை அணை.. இதுதான் காரணமா?
வைகை அணையில் தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் பச்சை நிறமாக மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 51.91 அடியாக உள்ளது.
வைகை அணைக்கு கடந்த சில வாரங்களாகவே நீர்வரத்து மிக மிகக் குறைந்து காணப்படுகிறது. வைகை அணையின் பிரதான நீர் ஆதாரமான வைகை ஆறு வரண்டு விட்ட நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யவில்லை.
பச்சை நிறத்தில் அணை
இந்த நிலையில் வைகை அணையில் தேங்கி இருக்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது. வைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாற்றில் அதிக அளவு கழிவுநீர் கலப்பதாலும், நீண்ட நாட்கள் தேக்கி வைத்திருப்பதாலும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கழிவு நீர் கலப்பு
மேலும் தேனி மாவட்டத்தில் காற்று வீசாத காரணத்தால் தண்ணீரின் மேல் பகுதியில் அதிக அளவு பாசி படர்ந்து உள்ளதாகவும், காற்று வீசும் பட்சத்தில் பாசிகள் கலைந்து ஒதுங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. வைகை அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளதால் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More:
பல்கலைக்கழக கிளைகள் அமைக்கும் திட்டம்.. லண்டன் டைம்ஸ் உயர்கல்வி அமைப்புடன் ஒப்பந்தம்..!
What's Your Reaction?






