15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை.. கருக்கலைப்பு செய்த 17 வயது அண்ணன் கைதால் அதிர்ச்சி..

கோவையில் 15 வயது தங்கையை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனியார் மருத்துவமனையில் கருக் கலைப்பு  செய்த 17 வயது அண்ணனை கைது செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

Aug 14, 2024 - 02:54
Aug 14, 2024 - 15:29
 0
15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை.. கருக்கலைப்பு செய்த 17 வயது அண்ணன் கைதால் அதிர்ச்சி..
15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது அண்ணன் கைது

கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் பள்ளியில் படித்து வருகிறார். அவரது 17 வயது அண்ணன் கடந்த பல ஆண்டுகளாக தனது சித்தியின் மகளான 15 வயது தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார்.

இதனைக் கண்டு அந்த 17 வயது சிறுவன், அந்த 15 வயது தங்கையை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருக் கலைப்பு செய்து உள்ளனர். பின்னர் வீட்டிற்கு திரும்பி அவர்கள் இருந்து உள்ளனர். கருக்கலைப்பு செய்ததால், சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி உள்ளது.

இதை படித்தீர்களா..: பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..

மகளின் உடல்நிலை சோர்வாக உள்ளதை கண்டு அவரது பெற்றோர்கள் அந்த சிறுமியை விசாரித்த போது தனது அண்ணன் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் உறவு வைத்ததாகவும், மேலும் இதனால் கர்ப்பம் அடைந்து மருத்துவமனையில் கருக் கலைப்பு செய்ததாக கூறி உள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் 17 வயது சிறுவன், சிறுமிக்கு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கோடிக்கணக்கில் மோசடி.. தனியார் தொலைக்காட்சி நிறுவனர் தேவநாதன் கைது..

சித்தி மகளை தங்கை என்று பாராமல் அண்ணன் செய்த இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் 17 வயது சிறுவன், சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த சம்பவத்தால், கோவையில் மருத்துவத் துறையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனை மீதும், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow