இந்த வாரம் ரிலீசாகும் 3 படங்கள்... எதை பார்க்கலாம், எதை தவிர்க்கலாம்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான், சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்திசுரேஷ் நடித்த ரகுதாத்தா, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியாபவானிசங்கர் நடித்த டிமான்டிகாலனி2 என 3 படங்கள் இந்த வாரம் ரிலீஸ். இந்த படங்களின் கரு என்ன? ஸ்பெஷல் என்ன?

Aug 13, 2024 - 23:53
Aug 14, 2024 - 15:29
 0
இந்த வாரம் ரிலீசாகும் 3 படங்கள்...              எதை பார்க்கலாம், எதை தவிர்க்கலாம்?
இந்த வாரம் ரிலீஸ் ஆகும் 3 படங்கள்.

ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தின விடுமுறை தினம் என்பதால் தமிழில்  3 முக்கியமான ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் குறித்த ஒரு பார்வை:

தங்கலான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகாமோகனன் உட்பட பலர் நடித்த படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 3 படங்களில் இதுவே பட்ஜெட் வாரியாக, நட்சத்திரங்கள் வாரியாக வெயிட்டான படம். உலகம் முழுக்க அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படமும் கூட. ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் கோலார் தங்கவயல் மாதிரியான ஒரு தங்கவயலை ஆதிக்க சக்திகள் அமைக்க முயற்சிக்க, அதனால் பாதிக்கப்படும் பூர்வகுடிகள் போராடுவதே கதை என்று கூறப்படுகிறது. அந்த பூர்வகுடி தலைவராக அல்லது போராட்டக்குழு தலைவராக விக்ரம் நடித்துள்ளார். 

சேது, ஐ, பிதாமகன் படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். அதை விட இந்த படத்துக்குதான் அதிக கஷ்டம் என்று ஓபனாகவே பேட்டி கொடுத்துவிட்டார் விக்ரம். கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்கள், கர்நாடகா, ஆந்திரா, மும்பை என பல்வேறு இடங்களுக்கு சென்ற படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். விக்ரம் தவிர பார்வதி, மாளவிகாமோகனன் கேரக்டர், கெட்டப்புக்கு இப்பவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் சில பாடல்களும் ஹிட். அதேசமயம், ரஞ்சித் தனது கருத்துகளை புகுத்தி இருப்பாரோ? அவர் பாணியிலான படமாக, வேறு வகை படமாக இருக்குமோ என்றும் பலருக்கும் டவுட். பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை ஹிட் என்றாலும் அது தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்து அவர் இயக்கத்தில் தியேட்டரில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது ஹிட் ஆகவில்லை. அதனால், அவருக்கும் ஒரு பெ ரிய வெற்றி தேவைப்படுகிறது. ஆகவே தங்கலான் எந்த கருத்தை வலிய  திணக்கும் படமாக இருக்காது என்று கூறப்படுகிறது. மற்ற 2 படங்களை விட  தங்கலான் பெ ரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

ரகுதாத்தா

சுமன்குமார் இயக்கத்தில் கீ்ர்த்திசுரேஷ் கதைநாயகியாக நடித்த படம் ரகுதாத்தா. 1970களில் இந்த கதை நடக்கிறது. அப்போது பேங்க் பரீட்சையில் பாஸ் ஆக இந்தி முக்கியம். அதை மையமாக வைத்து காமெடி, காதல், சென்டிமெ ன்ட் கலந்து இந்த கதை உருவாகி உள்ளது. கே.ஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே தயாரித்துள்ளது. இது இந்தி திணப்பு பற்றிய படம், இந்திக்கு எதிரான படமல்ல, எந்த அரசியல் சர்ச்சையும் இல்லை என்று கீர்த்திசுரேஷ் கூறி வருகிறார். தான் கதைநாயகியாக நடித்த படம் என்பதால் மதுரை, கோவை போன்ற பல்வேறு இடங்களுக்கு, விஜய், அரசியல் என பல விஷயங்களை பரபரப்பாக பேசி படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். கீர்த்திசுரேஷ் நடித்த சமீபத்திய தமிழ்ப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவி்ல்லை. தெலுங்கில் தசரா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தமிழிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார் கீர்த்திசுரேஷ்.  ரகுதாத்தா ஏமாற்றாது என்று பெரிதும் நம்பியிருக்கிறார்.
பெ ரிதும் நம்பி இருக்கிறார்

டிமான்டி காலனி2

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியாபவானிசங்கர், அருண்பாண்டியன், அர்ச்சனா நடித்த படம் டிமான்டி காலனி 2. 2015ம் ஆண்டு அஜய்ஞானமுத்து  இயக்கிய படத்தின் அடுத்த பாகம் இது. முதற்பாகத்தில் ஸ்ரீனியாக நடித்த அருள்நிதி இறந்துவிட்ட நிலையில், இந்த பாகத்தில் ரகுவாக அவர் நடித்துள்ளார். அந்த ஸ்ரீனிக்கும், ரகுக்கும் என்ன உறவு. இந்த பாகத்தில் எப்படி பேய் வருகிறது. என்னென்ன அட்டகாசம் செய்கிறது என்பதை திரில்லர், ஹாரர் பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பிடிஜி நிறுவனம் தயாரித்துள்ளது. ஹீரோயின் பிரியாபவானிசங்கருக்கு முக்கியமான கேரக்டர் என படக்குழுவில் உள்ள அனைவரும் சொல்கிறார்கள். வரிசையாக என் படங்கள் தோல்வி அடைந்தால் நானா பொறுப்பு என்று பிரியா பேட்டிகளில் பீல் பண்ணி வரும்நிலையில், அவருக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. உலகம் முழுக்க 600க்கும் அதிகமான டிமான்டி காலனி 2 வெ ளியாகிறது.

இந்த 3 படங்களில் எந்த படம் வெ ற்றி, எந்த படம் சுமார், எது தோ ல்வி என்பது இன்னும் சில தினங்களில் தெ ரிந்துவிடும். ஆகஸ்ட் 23ம் தேதி சிவகார்த்திகே யன் தயாரிப்பில் கூழாங்கல் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பெ ன் நடித்த கொட்டுக்காளி, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை, புதுமுகங்கள் நடித்த நாற்கரப்போர் மற்றும் சாந்தினி நடித்த அமீகோ ஆகிய  படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

தங்கலான், ரகுதாத்தா, டிமான்டி காலனி படங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது, தங்கலான் படத்தில் ஹீரோவாக நடித்த விக்ரமுடன் சாமி2 படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கீர்த்திசுரேஷ். விக்ரம் நடித்த கோப்ரா படத்தை இயக்கியவர், டிமான்டிகாலனி2 படத்தின் இயக்குனர் அஜய்ஞானமுத்து

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow