உலக ஹெபடைடிஸ் தினம் 2024.. காக்க காக்க.. கல்லீரல் காக்க! - என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது

World Hepatitis Day 2024 : ஹெபடைடிஸ் பி தொற்று தாக்கத்தால் ஏற்படும் விளைவு தான் இந்த மஞ்சள் காமாலை. இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் கடுமையாக தொற்று பாதிப்பு இருக்கும். சரியாக சிகிச்சை அளித்தால் குணமாகும்.

Jul 26, 2024 - 12:28
Jul 26, 2024 - 12:56
 0
உலக ஹெபடைடிஸ் தினம் 2024.. காக்க காக்க.. கல்லீரல் காக்க! - என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
World Hepatitis Day 2024

World Hepatitis Day 2024 : ஹெபடைடிஸ் பி என்னும் வைரஸ் தொற்று கல்லீரலை தாக்கும்போது ஏற்படுத்துகிற பாதிப்பை தான் ஹெபடைடிஸ் பி என்னும் கல்லீரல் அழற்சி என்கிறோம். ஹெபடைடிஸ் பி தான் உலக அளவில் மிக அதிகமானோரை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.கல்லீரலில் ஏற்படும் நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ஆம் தேதி அன்று உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக"நடவடிக்கைக்கான நேரம் இது" மற்றும் "நடவடிக்கை எடு. பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி" என்பதை அடிப்படையாக வைத்து கடைபிடிக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் பி என்னும் வைரஸ் தொற்று கல்லீரலை தாக்கும்போது ஏற்படுத்துகிற பாதிப்பை தான் ஹெபடைடிஸ் பி என்னும் கல்லீரல் அழற்சி என்கிறோம். ஹெபடைடிஸ் பி தான் உலக அளவில் மிக அதிகமானோரை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின்படி உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் ஹெபடைடிஸ் பி தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இந்த கல்லீரல் தொற்று நோய்களால் இறப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸில் ஐந்து முதன்மை வகைகள் உள்ளன. அவை ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகும். மேலும் இந்த நோய்கள் பல்வேறு வழிகளில் பரவுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ பெரும்பாலும் அசுத்தமான உணவு மற்றும் நீரால் பரவுகின்றன. ஆனால் ஹெபடைடிஸ் பி முதன்மையாக பாலியல் ரீதியாக பரவுகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் அல்லது அசுத்தமான இரத்தத்தின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவலாம். ஹெபடைடிஸ் சி பொதுவாக பாதிக்கப்பட்ட இரத்தத்தால் பரவுகிறது. அதேசமயம் ஹெபடைடிஸ் டி வகை ஏற்கனவே ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை மேலும் பாதிக்கிறது.

அறிகுறிகள்:

ஹெபடைடிஸ் பி தொற்றின் அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த தொற்று கடுமையாக இருப்பவர்களுக்கும் நாள்பட்ட தொற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும் அறிகுறிகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

கடும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி, அதிகப்படியான சோர்வு, காய்ச்சல், பசியின்மை, களைப்பு, குமட்டல் மற்றும் வாந்தி, வயிறு வலி, சிறுநீர் மற்றும் மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது, கண்களில் மஞ்சள் நிறம் உண்டாவது என சில அறிகுறிகள் தோன்றும்.

ஹெபடைடிஸ் பி தொற்று தாக்கத்தால் ஏற்படும் விளைவு தான் இந்த மஞ்சள் காமாலை. இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் கடுமையாக தொற்று பாதிப்பு இருக்கும். சரியாக சிகிச்சை அளித்தால் குணமாகும். ஆனால் இன்னொரு வகையில் நீண்ட நாட்களாக இந்த தொற்று உடல் திரவங்கள் மற்றும் சுரப்பிகளில் பரவத் தொடங்கும். இந்த நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்றானது கல்லீரல் சேதத்தை ஏற்படுத்துவதோடு கல்லீரல் புற்றுநோய்க்கும் காரணமாக அமையும்.

ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட எல்லா வகை பிரச்சினைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow