”குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால்...” சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்
குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவத்தொடங்கிய குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், பாகிஸ்தானிலும் பரவி இருக்கிறது. இந்த நோய் உலகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்த நோயால் நடப்பாண்டில் மட்டும் மே மாதம் வரை காங்கோவில் 384 நபர்கள் உயிரிழந்த சோகமும் ஏற்பட்டது. இதனையடுத்து கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை நினைவில் வைத்திருக்கும் பல நாடுகளின் சுகாதார துறைகள் தற்போது குரங்கம்மை நோய் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
அறிகுறிகள்:
காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பகால நோய் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும். இந்த தடிப்புகள் அரிப்பையும், வலியையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்த நோய் உயிரைக்கொல்லும் தொற்றாக மாறிவிடும் எனவும் குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்:
மேலும், குரங்கம்மை குறித்த வழிகாட்டு நெரிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதில், குரங்கம்மை அறிகுறி இருப்பவர்கள் மற்ற நோயாளிகள் மற்றும் சுகாதார பணியாளர்களிடன் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குரங்கம்மைக்கான நோய்கான அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால், அவர்களது பெயர், வசிப்பிடம் உள்ளிட்ட விவரங்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: படுக்கையை விட்டு எழமுடியாத அளவிற்கு இருந்தேன்..நான் எதிர்கொண்ட விஷயங்கள்..ராபின் உத்தப்பா open talk!
குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், குரங்கம்மை பாதிப்புக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளை நாடுங்கள் எனவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்புடன் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?