Rajinikanth: School போக அடம்பிடித்த பேரன்... சூப்பர் தாத்தாவாக மாறிய ரஜினிகாந்த்... க்யூட் மொமண்ட்!
Actor Rajinikanth Latest Photos : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பேரனுக்காக சூப்பர் தாத்தாவாக மாறிய க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Actor Rajinikanth Latest Photos : கோலிவுட் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே அம்பானி இல்ல திருமண விழா, கேரளாவில் லூலூ மால் குழுமங்களின் தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சி என படு பிஸியாக வலம் வந்தார். மும்பையில் அம்பானி வீட்டு திருமணத்தில் ஆட்டம் போட்டும் வைப் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து தற்போது சென்னையில் உள்ள ரஜினிகாந்த், தனது பேரனை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிச் சென்ற போட்டோ வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. 2010ம் ஆண்டு அஷ்வின் குமார் என்பவரை திருமணம் செய்த செளந்தர்யா, 2017ல் அவரை பிரிந்தார். அதன்பின்னர் 2019ல் விஷாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அதேநேரம் அஷ்வின் குமார் – செளந்தர்யா தம்பதிகளுக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். அம்மா செளந்தர்யாவுடன் வசித்து வரும் வேத் கிருஷ்ணா, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் செல்லப் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யாவின் மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் வேத் கிருஷ்ணாவும் தாத்தாவின் அரவணைப்பில் நெருக்கமாகிவிட்டார். இன்று அவர் தனது பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என அடம்பிடித்துள்ளார். இதனால் வேத் கிருஷ்ணாவை சமாதானப்படுத்திய ரஜினிகாந்த், அவரே காரில் அழைத்துச் சென்று பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டுள்ளார். வேத் கிருஷ்ணா அடம் பிடிப்பதையும், ரஜினி அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றதையும், செளந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதில், இன்று காலை எனது மகன் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என அடம்பிடித்தான். இதனை அடுத்து தனது மகனை, அவனது சூப்பர் ஹீரோ தாத்தா பள்ளிக்கூடத்துக்கு கூட்டிச் சென்றார். எல்லாவிதமான கேரக்டருக்கும் பொருத்தமானவர் எனது அப்பா என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் இது க்யூட்டான மொமண்ட் என அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஊருக்கும் உலகிற்கும் சூப்பர் ஸ்டராக இருந்தாலும் வீட்டில் எப்போதும் அவர் சிம்பிள் தான் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் எனவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க - தனுஷின் ராயன் ட்விட்டர் விமர்சனம்
இந்த புகைப்படத்தில் வேத் கிருஷ்ணாவின் பள்ளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சென்றதை பார்த்ததும், அங்கிருக்கும் மாணவர்கள் அவரை ஆச்சரியமாக பார்ப்பதும் செம க்யூட்டக உள்ளது. தனுஷின் ராயன் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் க்யூட்டான போட்டோவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






