திருச்செந்தூர் கோயிலில் தரிசனம்... மாலையும் கழுத்துமாக சிவகார்த்திகேயன்... இதுதான் விஷயமா?
Actor Sivakarthikeyan Son Name : சிவகார்த்திகேயன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு மூன்றாவது மகன் பிறந்துள்ளதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது மகனுக்கு பெயர் சூட்டியுள்ள சிவகார்த்திகேயன், அதுபற்றியும் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

சென்னை: கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வரும் சிவகார்த்திகேயன், தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த அமரன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, பெர்சனலாக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். அதாவது தனக்கு மூன்றாவதாக மகன் பிறந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் ட்வீட் செய்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த பேட்டி ஒன்று வைரலானது. அதில், தனது மனைவியை பிரிந்ததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்பதாக கூறியிருந்தார் டி இமான். இருவருமே அண்ணன், தம்பியாக பழகி வந்த தருணத்தில், சிவகார்த்திகேயன் மீது டி இமான் இப்படியொரு குற்றச்சாட்டு வைத்தது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட்டிலும் இந்த விவகாரம் குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகின. மேலும், சீக்கிரமே சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துவிடுவார் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன.
ஆனால் இந்த சர்ச்சைக்கெல்லாம் பதில் சொல்லாத சிவகார்த்திகேயன், எப்போதும் போல சைலண்டாக வலம் வந்தார். தனது மனைவி ஆர்த்தியுடன் மகிழ்ச்சியாக இருப்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக, மூன்றாவது மகன் பிறந்துள்ளான் என்ற அப்டேட்டை சிவகார்த்திகேயன் வெளியிட்டதாக சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று, மூன்றாவது மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றதையும், அவனது பெயர் என்ன என்பதையும் சிவகார்த்திகேயனே அறிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் மூன்றாவது மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில், ஆராதனா, குகன் வரிசையில் மூன்றாவது மகனின் பெயர் பவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் பங்கேற்றுள்ளதை பார்க்க முடிகிறது. சிவாவும் ஆர்த்தியும் மாலையும் கழுத்துமாக பங்கேற்க, மூன்றாவது மகனுக்கு பவன் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பெயர் சூட்டும் விழா முடிந்ததும் திருச்செந்தூர் சென்ற சிவகார்த்திகேயன், அங்குள்ள முருகன் கோயில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Aaradhana - Gugan - PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024
What's Your Reaction?






