Bad girl திரைப்பட சர்ச்சை... தணிக்கை சான்றிதழ் விண்ணப்பம் வரவில்லை..!
Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன், அனுராஜ் ஹாசியப் தயாரிப்பில் நடிகை அஞ்சலி, ரம்யா ஆகியோர் உருவாகியுள்ள Bad Girl திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ம் தேதி வெளியானது.
இந்த டீசரில் பிராமண பெண் நாகரீக கலாச்சாரத்துக்கு மாறும் வகையிலும் , பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் Bad girl திரைப்பட டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த டீசரை வைத்து சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் பிராமண இனத்தை தரம் தாழ்த்தி பேசப்பட்டு வருகிறது.
பிரமாண மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அதுவரை சென்சார் போர்டுக்கு, bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில், குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் தவறாக சித்தரித்து காட்சிகள் அமைப்பது சட்டவிரோதமானது என்பதால் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், bad girl என்ற பெயரில் சென்சார் சான்று வழங்க அனுமதி கோரி இது வரை தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை இருந்தாலும் மனுதாரரின் மனுவினை சட்டப்படி பரிசீலிக்க படும் என தணிக்கை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?






