தமிழ்நாடு

செட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகாததால் தேர்வர்கள் குழப்பம்..!

செட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் இதுவரை எந்த தகவலும் இல்லாததால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

செட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகாததால் தேர்வர்கள் குழப்பம்..!
செட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகாததால் தேர்வர்கள் குழப்பம்..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மாநில அளவிலான உதவிப் பேராசிரியர் தகுதி தேர்வு நடத்த இருப்பதாகவும் இன்று ஹால் டிக்கெட் வெளியிட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

 அதாவது மார்ச் 6ம் தேதி தேர்வுக்கு ஒரு வாரம் முன்னதாக ஆல் டிக்கெட் வெளியிடப்படும் என்று கூறியிருந்தது தேர்வுக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், இன்று மாலை வரை எந்த தகவலும் வராததால் செட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்த இருந்த தேர்வு ஆல் டிக்கெட் வெளியிடப்பட்டு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனால் தேர்வு எழுதும் நபர்களுக்கு ஏராளமான ஏமாற்றங்கள் பொருட் செலவு ஏற்பட்டது. கடந்த முறை சரியாக 20 நாட்களுக்கு முன்பாக  திடீரென தேர்வு ரத்து குறித்த தகவலை டிஆர்பி வெளியிட்டது. எனவே இந்த முறையும் தேர்வு தள்ளி வைக்கப்படுமா அல்லது அதே தேதியில் நடக்குமா என்பதில் தேர்வர்களுக்கு பெருமளவுக்கு குழப்பம் இருக்கின்றது. 

எனவே  ஆசிரியர் தேர்வாணையம் உறுதியான தகவலை விரைந்து வெளியிட வேண்டுமென தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்