Meiyazhagan Box Office Day 1 : படம் சூப்பர்... ஆனா கலெக்ஷன் சுமார்... மெய்யழகன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Meiyazhagan Box Office Collection Day 1 : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Sep 28, 2024 - 12:13
Sep 28, 2024 - 13:04
 0
Meiyazhagan Box Office Day 1 : படம் சூப்பர்... ஆனா கலெக்ஷன் சுமார்... மெய்யழகன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
மெய்யழகன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்

Meiyazhagan Box Office Collection Day 1 : பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். ஃபீல்குட் மூவியாக டிராமா ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. பிரேம்குமாரின் முதல் படமான 96 போல், மெய்யழகனும் ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த் சாமி, உறவுகளையும் தனது வேர்களையும் தேடுவதும், அதன் பின்னணியும் தான் மெய்யழகன் படத்தின் கதை. 

இதில், கார்த்தி – அரவிந்த் சாமி இடையேயான உரையாடல்களும், எமோஷனலான காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. முக்கியமாக இந்தப் படத்தின் திரைக்கதையும் மேக்கிங்கும் ஒரு நாவல் படிக்கும் ஃபீல் கொடுப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள், கமர்சியல் ஜானரில் வெட்டு, குத்து என ரத்தம் தெறிக்க தெறிக்க உள்ளன. இதற்கெல்லாம் மாற்றாகவும் ஒரு வித்தியாசமான படமாகவும் மெய்யழகன்(Meiyazhagan) வந்துள்ளதாக பலரும் கூறியுள்ளனர். 

அதேநேரம் மெய்யழகன்(Meiyazhagan) படம் முழுக்க நாடகம் பார்ப்பதை போல இருக்கிறது. முக்கியமாக ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காட்சிகள் எல்லாம் தேவையில்லாத ஆணி தான், அதையெல்லாம் நீக்கியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என நெகட்டிவாகவும் விமர்சனம் கொடுத்துள்ளனர். முக்கியமாக கார்த்தி தான் மெய்யழகன் என்பது படம் தொடங்கியதும் கணிக்க முடிந்ததாகவும், படத்தில் பெரியளவில் எந்த சஸ்பென்ஸ் இல்லையென்றும் கூறியுள்ளனர். இருப்பினும் மெய்யழகன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், மெய்யழகன்(Meiyazhagan First Day Box Office Collection) படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கார்த்தியின் படங்கள் பெரும்பாலும் முதல் நாளில் 15 கோடி வரை கலெக்ஷன் செய்யும். ஆனால், மெய்யழகன் ரொம்ப குறைவாக 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. முன்னதாக மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து, ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow