தமிழ்நாட்டில் ஜூலை 13 வரை ஜில்லென பெய்யும் மழை.. ரெயின் கோட் அவசியம்

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அசாம், அருணாச்சல் பிரதேசம், மேற்குவங்கம், மணிப்பூர், மிசோரமில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அரஞ்ச் அலர்ம் விடுத்துள்ளது.

Jul 8, 2024 - 10:33
 0
தமிழ்நாட்டில் ஜூலை 13 வரை ஜில்லென பெய்யும் மழை.. ரெயின் கோட் அவசியம்
weather update

தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் கனமழை பெய்கிறது.சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. 

மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 13ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கேரள எல்லையோர தமிழ்நாட்டின் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களான கடலூர், மற்றும் சீர்காழி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் ( ஜூலை 7) பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சில இடங்களில் இயல்பைஒட்டியும், சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும் வெப்பநிலை இருந்தது. அதன்படி மதுரை விமான நிலையத்தில் அ திகபட்சமாக 103 டிகிரி வெயில் கொளுத்தியது. நாகப்பட்டினம் 101 டிகிரி, பெரும்பாலான இடங்களில் 100டிகிரிக்கும் குறைவாகவே வெயில் இருந்தது.

இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ( ஜூலை 8) முதல் 13ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் பொதுவாக மேககூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் 11ம் தேதி வரை வீசும். மேலும், தென் மேற்கு, ெதன் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய வட மேற்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் 10ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

வட கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அசாம், அருணாச்சல் பிரதேசம், மேற்குவங்கம், மணிப்பூர், மிசோரமில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சண்டிகரிலும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow