Kodaikanal Landslide Warning : மலைகளின் இளவரசிக்கு ஆபத்தா? விழித்துக் கொள்ளுமா அரசு..?

Kodaikanal Landslide Warning Report : வயநாடு போல தமிழ்நாட்டிலும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இது போல நிலச்சரிவு நிகழும் ஆபத்துக்கள் உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Aug 6, 2024 - 17:37
Aug 6, 2024 - 18:08
 0

Kodaikanal Landslide Warning Report : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர்தான் பேசுப்பொருளாகி இருக்கிறது. வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு(Wayanad Landslide) ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பலரும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர்.

வயநாட்டில் அதிக அளவில் கான்கிரீட் கட்டடங்கள் முளைத்துள்ளன. இதே போல தமிழ்நாட்டிலும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும்(Kodaikanal) இது போல நிலச்சரிவு நிகழும் ஆபத்துக்கள் உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே கொடைக்கானலில் சாலைகளை(Kodaikanal) அமைக்கவும், ரிசார்ட் உள்ளிட்ட கட்டடங்களை கட்டவும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதனால் நிலச்சரிவு அபாயம்(Landslide Warning) உள்ளதாகவும் புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.இதனிடையே ஆபத்து வரும் முன்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow