Ayakudi Coaching Center : மரத்தடியில் இருந்து உருவான மன்னர்கள்.. 20 வருடங்களில் 35,000 அரசு ஊழியர்கள்

Dindigul Ayakudi Coaching Center : திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவர் எல்.ஐ.சி ஊழியர். இவர் பழைய ஆயக்குடி காவல்நிலையம் அருகே உள்ள புளியமரத்தடியில் வைத்து அரசுப் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை அளித்து இதுவரை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் 35 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர உதவியுள்ளார்.

Aug 6, 2024 - 17:16
Aug 6, 2024 - 17:36
 0

Dindigul Ayakudi Coaching Center : பழநியிலிருந்து 5 கி.மீ தூரத்தில், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள தனது சொந்த ஊரான ஆயக்குடியில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை 2004ல் தொடங்கினேன்(Ayakudi Marathadi Free Coaching Center). நண்பர்களின் உதவியோடு இலவச பயிற்சி மையத்தைத் தொடங்கி, போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்தனர்.

அந்தத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதனால் பலரும் எங்களை ஏளனமாகப் பேசினர். ஆனால் மனம் தளராமல் அடுத்த போட்டித் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினோம். 

2007ஆம் ஆண்டில் நடந்த தேர்வில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 24 பேர் கிராம நிர்வாக அலுவலர்களாகத் தேர்ச்சி பெற்றனர்.கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து இதுவரை 35 ஆயிரம் பேர் அரசுப் பணியில்(Government Employees) சேர உதவியுள்ளோம் என்று கூறியுள்ளார் ராமமூர்த்தி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow