Anbil Mahesh with KN Nehru in Trichy : பாசமலர்களான அன்பில் மகேஷ் கேஎன் நேரு.. குஷியான திருச்சி திமுக கூட்டம்

Anbil Mahesh with KN Nehru in Trichy : அன்பில் மகேஷ் வருகைக்கு பிறகு கே.என்.நேருவின் செல்வாக்கு லேசாக குறையத் தொடங்கியது என்பதே நிதர்சனம். இதனால் திருச்சி திமுக கூடாரத்தில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது. இரண்டு அணி திருச்சியில் உருவாகியது.

Aug 1, 2024 - 17:23
Aug 2, 2024 - 10:19
 0

Anbil Mahesh with KN Nehru in Trichy : அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கேஎன் நேருவும் மாறி மாறி அன்பை பொழிந்துக் கொண்டுள்ள நிகழ்வுகள் திருச்சி திமுகவின் உடன்பிறப்புகளை குஷியாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்பிலை அன்பாக அழைப்பது தொடங்கி, அவரது கையை பிடித்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்க வைப்பது வரை ஒவ்வொரு Frameகளிலும் அமைச்சர் கே.என்.நேருவின் பாசமலர் சீன்கள் உடன்பிறப்புகளை உற்சாகமாக்கியுள்ளது. 

திமுக வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று திருச்சி மாவட்டம். திருச்சி சிவா, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் என்று கட்சியின் முக்கிய தலைகளால் திருச்சி மாவட்டம் திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. ஆனால் இவர்கள் மூன்று பேரும் தலைமையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறித்தான். திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கும் கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவழியாக ஓய்ந்துள்ள நிலையில், அண்மைக்காலமாக அன்பில் மகேஷிற்கும் கே.என்.நேருவிற்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இது ஜூனியர் சீனியர் சண்டை என்பதைத் தாண்டி, திருச்சி யாருடைய கட்டுக்குள் இருக்கிறது என்ற அதிகாரச் சண்டை என்றே சொல்லலாம். 

வேலூரில் துரைமுருகன், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியை போல திருச்சி என்றாலே கே.என்.நேருவை எதிர்த்து அரசியல் செய்ய யாருமே இல்லை என்ற நிலையே இருந்தது. அப்போதுதான் கே.என்.நேருவின் சாம்ராஜ்ஜியத்தையே அசைத்து பார்க்கும் அளவிற்கு, கலைஞரின் நெருங்கிய நண்பரான அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், ஸ்டாலின் நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகனும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகை இருந்தது என்ப்தே  அரசியல் விமர்சகர்களின் கருத்து. இவரின் வருகைக்கு பிறகு கே.என்.நேருவின் செல்வாக்கு லேசாக குறையத் தொடங்கியது என்பதே நிதர்சனம்.  இதனால் திருச்சி திமுக கூடாரத்தில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது. இரண்டு அணி திருச்சியில் உருவாகியது. ஆனால், அதெல்லாம் எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் வதந்திகள் என்று சொல்லப்பட்டாலும், இரண்டு அணிக்கும் இடையில் அவ்வப்போது பிரச்னைகளுகு எழந்துக் கொண்டே தான் இருந்தன.  

உட்கட்சி தேர்தலின் போது மாநகர் பகுதிகளை பிடிப்பதில் தொடங்கி, மேயர் தேர்தல், எம்.பி. தேர்தல் என மோதல்கள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன. குறிப்பாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷ், அங்கு கட்சி பொறுப்பில் இருந்த கே.என்.நேரு ஆதரவாளர்களை நீக்கி, தன்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக கே.என்.நேரு ஆதரவாளர்கள், அன்பில் மகேஷிற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியது திமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. தலைமையின் பார்வைக்கு சென்றதும், அன்பில் மகேசுக்கு அட்வைஸ் செய்து அனுப்பியதாகக் கூறப்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow